ஆ.கந்தையா. நுகேகொடை: கலாநிதி ஆ.கந்தையா, சிரேஷ்ட விரிவுரையாளர், இலங்கை திறந்த பல்கலைக்கழகம், நாவல, 1வது பதிப்பு, மார்ச் 1989. (கொழும்பு 14: ஸ்டார்லைன் பிரின்டர்ஸ்).
(4), 62 பக்கம், விலை: ரூபா 35.00, அளவு: 17.5×12.5 சமீ.
சிலப்பதிகாரத்தைப் பற்றியும் மணிமேகலையைப் பற்றியும் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் சில இரண்டு காப்பியங்களையும் ஒப்பிட்டு எழுதப்பெற்றவை. இந்நூலும் அவ்விரண்டு காப்பியங்களையும் ஒப்பிட்டு எழுதப் பெற்றதேயாகும். ஒற்றுமையுள்ள சொற்றொடர்கள், வருணனைகள், உவமைகள், கருத்துக்கள், நிகழ்ச்சிகள் என்பன இந்நூலிலே ஒப்பிட்டு ஆராயப்பட்டுள்ளன. சிலப்பதிகாரம், மணிமகலை, இரட்டைக் காப்பியங்கள், ஒற்றுமைகள், முடிவுரை என்ற நான்கு அத்தியாயங்களில் அடக்கப்பட்டுள்ள இந்நூலில், ஒற்றுமைகள் என்ற ஒப்பீட்டு இயல் சொற்றொடர் ஒற்றுமை, வருணனை ஒற்றுமை, உவமை ஒற்றுமை, கருத்து ஒற்றுமை, நிகழ்ச்சி ஒற்றுமை ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் பிரதான விடயதானம் வகுத்துத் தரப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14696).