15829 கலாபூஷணம் ஏ.இக்பால் அவர்களின் ஈழத்துப் பூதந்தேவனார் நான்மணிமாலை (சிறு பிரபந்த ஆக்கம்).

ஏ.இக்பால், ஜெ.கந்தவேள், ஜெ.தவஞானம். யாழ்ப்பாணம்: ஈழத்துப் பூதந்தேவனார் தமிழ்ப் புலவர் கழகம், 153, காங்கேசன்துறை விதி, கொக்குவில், 1வது பதிப்பு, 2006. (கொழும்பு 6: டெக்னோ பிரின்ட், 55 டாக்டர் ஈ.ஏ. குரே மாவத்தை).

52 பக்கம், விலை: ரூபா 80.00, அளவு: 22×14.5 சமீ.

இந்நூலில் கலாபூஷணம் ஏ. இக்பால் அவர்களின் ‘ஈழத்துப் பூதந்தேவனார் நான்மணிமாலை’ என்ற சிறு பிரபந்த ஆக்கமும், திருமதி ஜெ.கந்தவேள் அவர்களின் ‘பூண்க நின் தேரே’ என்ற இலக்கிய நாடகமும், செல்வி ஜெ.தவஞானம் எழுதிய ‘தமிழும் சங்க இலக்கியங்களும்’ என்ற இலக்கிய ஆய்வும் இடம்பெற்றுள்ளன. ஈழத்துத் தமிழ்ப் புலவர் மரபினை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் ஈழத்துப் பூதந்தேவனார் தமிழ்ப் புலவர் கழகம், 2003இல் நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனத்தில் ஆதீன முதல்வர் முன்னிலையில் உருவாகியது. இக்கழகத்தின் முதற் பணியாக ஆய்வுக் கட்டுரைத் தேர்வு,  இலக்கிய நாடகத் தேர்வு, சிறுபிரபந்த ஆக்கத் தேர்வு ஆகிய தேர்வுகளை அவ்வாண்டு நடைமுறைப் படுத்தியது. இவை ஒவ்வொன்றிலும் சிறந்த ஆக்கங்களைத் தெரிவுசெய்து அவர்களுக்குத் தக்க நிதிப் பரிசிலும் கழகச் சான்றிதழும் வழங்க நடுவர் குழு தீர்மானித்திருந்தது. அவ்வாறு தெரிவுசெய்யப்பெற்ற ஆக்கங்கள் மூன்றும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவை மூன்றும் இலக்கியச் சுவையும், சொல் நயம் பொருள் நயம் என்பனவும் அமைந்த சிறந்த ஆக்கங்கள்.

ஏனைய பதிவுகள்

The Benefits of Using a VDR

VDRs (virtual deals rooms) are essential for certain businesses and industries. They can be an essential tool for other industries as well. The best solution