கி.விசாகரூபன். யாழ்ப்பாணம்: மலர் பதிப்பகம், 56/5, மணல்தறை ஒழுங்கை, கந்தர் மடம், 1வது பதிப்பு, தை 2017. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
ix, 125 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955-51860-1-8.
பேராசிரியர் கி.விசாகரூபன் இந்நூலில் பண்டைத் தமிழ் இலக்கியங்களை அலசி ஆராய்ந்து மேனாட்டார் நூல்களிலே காணப்படாத அரிய பல கருத்துக்களை தொல்காப்பியம், திருக்குறள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற பண்டைய இலக்கியங்களிலே கண்டு அவற்றை இந்நூலில் கட்டுரைகளாகப் படையலிட்டுள்ளார். இந்நூலில் தொல்காப்பியத்தில் திணைநெறி இறை வழிபாடு-ஓர் ஆய்வு, சங்க இலக்கியங்களில் உலகப் பொதுமைக் கருத்துக்கள், சங்கப் புலவர்கள் காட்சியிற் கண்ட உலகம், தமிழ்ச் சமூகத்தின் தொடக்ககால தகவல் முறைமைகள், பாலைக் கலிப் பாடல்களில் நிலையாமை, திருக்குறளும் பொருளியலும், திருக்குறள் காட்டும் நிலையாமை, தமிழர் பண்பாட்டில் ஆளுமை குறித்த கருத்துருவாக்கச் சிந்தனை, ஆகிய எட்டு ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.