இ.இராஜேஸ்கண்ணன். யாழ்ப்பாணம்: தூண்டி இலக்கிய வட்டம், 141, கேணியடி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2020. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
xvi, 134 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-7740-01-0.
இந்நூலில் பின்நவீனத்துவப் பாணியிலான ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு கோட்பாட்டு நிலையிலான அடையாளப்படுத்தல், பின்னைப் போர்க்காலக் கவிதைகள்: பாடுபொருள்களை மையப்படுத்திய தளவேறுபாடுகள் பற்றிய தேடல், இலக்கியத்தில் சிறுவர்களுக்கான சமூக நீதி: ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளை மையமாகக் கொண்ட ஓர் இலக்கியச் சமூகவியல் நோக்கு, ஜனநாயக வகுப்பறை: சிறுவர் பற்றிய இலக்கியமான ‘ஆயிஷா’வின் ஆழ்ந்த தரிசனம், துட்டுக்கு உதவாதா சொட்டைக்கவி? அங்கதமாய் நிகழ்ந்த ‘பாரதி கவிதைச் சமர்’ குறித்து நினைவில் மீட்டல், பெண்ணியக் கவிதைகள்: நோக்க வேறுபாடுகளுடன் கூடிய தடங்கள், இலங்கைத் தமிழ்ச் சிறுகதைகளில் நிலைமாற்றத்துக்கான நகர்வுகள், மு.தளையசிங்கத்தின் ‘மெய்யுள்’: காலவெளி கடந்த கருத்துநிலை பற்றிய ஒரு மறுவாசிப்பு, முகாமைத்துவத்தில் வழிநடத்தல்: திருக்குறள் வழியே எண்ணக்கருக்களைத் தேடல் ஆகிய ஒன்பது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரைகள் யாவும் சமூகம், இலக்கியம் எனும் இரு அம்சங்களும் ஒன்றுக்கொன்று கொண்டும் கொடுத்தும் சமாந்தரமான இயங்கியல் நிலையில் திகழ்வதை தெளிவுபடுத்துகின்றன. இராஜேஸ்கண்ணன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல்துறை முதநிலை விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார்.