15855 வித்துவம்: அமரர் வித்துவான் சி.குமாரசாமி அவர்களின் நினைவு மலர்.

 சி.குமாரசாமி. தெகிவளை: அமரர் வித்துவான் சி.குமாரசாமி நினைவு மலர்க் குழு, உதயாஸ் செரமிக்ஸ், 3B, காலி வீதி, 1வது பதிப்பு, 1994. (அச்சக விபரம் தரப்படவில்லை).

134 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.

அமரர் வித்துவான் சி.குமாரசாமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றுடன் விரியும் இந்நூலின் இரண்டாம் பகுதியில் ஆசிரியர் எழுதிய பன்னிரு கட்டுரைகள் தைப்பொங்கல், ஆடிப்பிறப்பு, கிருஷ்ண ஜெயந்தி, சக்தி வழிபாட்டு வரலாறு, அப்பூதியடிகள், சுந்தரமூர்த்தி நாயனார், தாயுமான சுவாமிகள், சிவவாக்கியர், மகாபாரதம், தமிழ் உரைநடை இலக்கியத்தின் தோற்றம், தமிழில் நாவல் இலக்கியம், எமது கல்வி வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் இடம்பெற்றுள்ளன. மூன்றாம் பிரிவில் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் தேர்த்திருவிழாப் பிரார்த்தனை, நயினாதீவு ஸ்ரீ காளியம்மன் திருவூஞ்சல் பதிகம், நயினாதீவு இரட்டங்காலி ஸ்ரீ முருகமூர்த்தி திருவூஞ்சற்பா ஆகிய மூன்று பக்தி இலக்கியங்கள் இடம்பெற்றுள்ளன. நான்காம் பிரிவில் கர்வபங்கம், சுவாமி விவேகானந்தர் ஆகிய நாட்டிய நாடகங்களின் எழுத்துருக்கள் இடம்பெற்றுள்ளன. இவை வானொலி ஒலிபரப்புகளுக்காகவும் நாட்டிய நாடகங்களாக நடிப்பதற்கும் என எழுதிய கையெழுத்துப் பிரதிகளினதும் வேறும் சில நூல்களில் முன்பு எழுதியிருந்த கட்டுரைகள் சிலவற்றினதும் தொகுப்பாகவே இந்நூல் வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39064).

ஏனைய பதிவுகள்

12351 – இளங்கதிர்: 13ஆவது ஆண்டு மலர் (1960-1961).

வி.கி.இராசதுரை (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1961. (கண்டி: கிங்ஸ்லி அச்சகம், இல. 205, கொழும்பு வீதி). (2), 120 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: