விஜயேந்திரன். மாவிட்டபுரம்: நயினார் பிரசுரம், கந்தசுவாமி கோவில் வடக்கு வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 1975. (காங்கேசன்துறை: சந்திரா அச்சகம்).
24 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 18×12சமீ.
கல்லடி வேலன் (க.வேலுப்பிள்ளை) 7.3.1860இல் யாழ்ப்பாணத்தில் வலிகாமம் வடக்குப் பகுதியில் உள்ள வசாவிளான் என்ற சிற்றூரில் கந்தப்பிள்ளை- வள்ளியம்மை தம்பதியினரின் மகனாகப் பிறந்தார். 1902இல் சுதேச நாட்டியம் என்ற பெயரில் இலக்கியம், சமயம், அரசியல் சார்ந்த ஒரு பத்திரிகையைத் தொடங்கி முப்பதாண்டுகள் வரை நடத்திவந்தார். ‘யாழ்ப்பாண வைபவ கௌமுதி’ உட்பட சுமார் இருபது நூல்களை இவர் எழுதியுள்ளார். இவற்றில் சிலவே இன்று நூலுருவில் காணமுடிகின்றது. கல்லடி வேலுப்பிள்ளை 1944இல் வசாவிளானில் மறைந்தார். அவர் அவ்வப்பொது எழுதியிருந்த நகைச்சுவைக் குட்டிக் கதைகளில் 32 கதைகளைத் தொகுத்து இந்நூலை சிலோன் விஜேந்திரன் வழங்கியிருக்கிறார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34852).