கமலா குணராசா (மூலம்), க.குணராசா (மீள்பார்வை). யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, நீராவியடி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: அபிராமி அச்சகம், 225, ஸ்ரான்லி வீதி).
84 பக்கம், விலை: ரூபா 25.00, அளவு: 20×14 சமீ.
ஆண்டு 11இற்கான வரலாறு பாடத்திட்டம் 33 பாடவேளைகளைக் கொண்டது. ‘இலங்கையில் பிரித்தானியர்ஆட்சி’ என்ற முதலாவது பிரிவில் 13 பாடவேளைகள் உள்ளடங்குகின்றன. இவை பின்னணி, கி.பி. 1796 தொடக்கம் 1818 வரை, கி.பி. 1818 தொடக்கம் 1931 வரை, கி.பி. 1932 தொடக்கம் 1948 வரை, பிரித்தானியர் காலத்தில் பொருளாதார அபிவிருத்தி, உணவுப் பயிர்ச் செய்கை, போக்குவரத்தும் தொடர்பாடலும், இலங்கையில் அரசியல் சமய மறுமலர்ச்சி, 1931இன் பின்னர் ஏற்பட்ட பொருளாதார சமூக மாற்றங்கள் ஆகிய பாடங்களைக் கொண்டுள்ளன. ‘மனித உரிமைகளை வென்றெடுத்தல்” என்ற இரண்டாவது பிரிவில் 8 பாடவேளைகள் உள்ளன. ஆங்கிலேயப் புரட்சி, அமெரிக்க சுதந்திரப்போர், பிரான்சியப் புரட்சி, இரசியப் புரட்சி ஆகிய நான்கு பாடங்களை இப்பிரிவு உள்ளடக்குகின்றது. ‘கைத்தொழிற் புரட்சி’ என்ற மூன்றாவது பிரிவில் 4 பாடவேளைகளும் ‘குடியேற்றவாதத்தின் ஆரம்ப வளர்ச்சி வீழ்ச்சி’ என்ற நான்காவது பிரிவில் எட்டு பாடவேளைகள் உள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 67374).
மேலும் பார்க்க: வரலாறும் சமூகக் கல்வியும்-படவேலைப் பயிற்சிகள் செயல்நூல் 15152