15864 ஆரம்ப புவியியல் (உலகம், இலங்கை): படப்பயிற்சி – எட்டாம் வகுப்புக்குரியது.

க.குணராசா (மூலம்), வே.க.கந்தசாமி (மீள்பார்வை). யாழ்ப்பாணம்: அன்பு வெளியீடு, 550/7, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1968. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி).

202 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள், நிழற்படங்கள், விலை: ரூபா 4.80, அளவு: 28.5×20.5 சமீ.

118 விளக்கப்படங்கள், 15 நிழற்படங்கள், 60 பயிற்சிப்படங்கள் என ஏராளமான படங்களுடன் எட்டாம் வகுப்புக்குரிய இப்படப்பயிற்சி நூல் எழுதப்பட்டுள்ளது. ‘உலகம்’ என்ற முதலாம் பகுதியில் நமது பூமி, நிலப்பரப்பும் நீர்ப்பரப்பும், புவியின் நிலத்தோற்றம், அரசியற் பிரிவுகள், வெப்பநிலை, அமுக்கமும் காற்றுகளும், மழை வீழ்ச்சி, காலநிலைப் பிரதேசங்கள், உலக மக்கள், பயிர்ச்செய்கை, மீன்பிடித் தொழில், விலங்கு வேளாண்மை, காடுகளும் காட்டுத் தொழில்களும், வலுப்பொருட்கள், கைத்தொழிற் பிரதேசங்கள், போக்குவரத்து வசதிகள், ஆசியா ஆகிய பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன. ‘இலங்கை’ என்ற இரண்டாவது பகுதியில், இலங்கை-பொது விபரங்கள், இலங்கையின் தரைத்தோற்றம், இலங்கையின்  காலநிலை, இலங்கையின் இயற்கைத் தாவரம், இலங்கையின் பயிர்ச்செய்கை, கனிப்பொருட்களும் கைத்தொழில்களும், மீன்பிடித் தொழில், இலங்கையின் குடிப்பரம்பல், இலங்கையின் போக்குவரத்து வசதிகள், இலங்கையின் வர்த்தகம், யாழ்ப்பாணக் குடாநாடு, இலங்கையின் நீர்ப்பாய்ச்சல் திட்டங்கள் ஆகிய பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன. படப்பயிற்சி என்ற மூன்றாம் பகுதியில் உலகப் படப் பயிற்சிகள், ஆசியாப் படப் பயிற்சிகள், இலங்கைப் படப் பயிற்சிகள், யாழ்ப்பாணக் குடாநாட்டுப் படப் பயிற்சிகள், சமவுயரக் கோட்டு விளக்கம், சமவுயரக் கோட்டுப் பயிற்சிகள் ஆகிய பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18634).

ஏனைய பதிவுகள்

Ausschreibung Vergabe Bruchrechnung

Ein schnellste Fern zum Hilfe – geradlinig alle Ihrer ORCA AVA! Verlagern Sie inside einen Menüpunkt Support ferner wählen Die leser Support. Nachfolgende Support-Team meldet