15869 ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்.

க.குணராசா, ஆ.இராஜகோபால். யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, மே 1979. (யாழ்ப்பாணம்: சித்திரா அச்சகம், 310, மணிக்கூட்டு வீதி).

(8), 134 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 7.50, அளவு: 20×13.5 சமீ.

‘வட அமெரிக்கா – அறிமுகம்’ (தரைத்தோற்றம் – நதிகளும் ஏரிகளும் கால நிலை – இயறகைத் தாவரம்), ‘ஐக்கிய அமெரிக்கா – பௌதிகப் பின்னணி’ (தரைத்தோற்றமும் அமைப்பும் – மண் வகைகள் – கால நிலை – இயற்கைத் தாவரம் – கனிப்பொருள் வளம்), ‘ஐக்கிய அமெரிக்கா – பொருளாதாரப் பின்னணி’ (குடிப்பரம்பல் -பயிர் செய்கை -கலப்பு வேளாண்மை வலயம் – சோளவலயம் – பருத்தி வலயம் – அயன அயல் பயிர்வளம் – கோதுமை வலயம் – தானிய பழவலயம் – கைத் தொழில்கள் – கைத்தொழில்) வலயம் – கைத்தொழில் மையங்கள் – இரும்பு உருக்குத் தொழில் – யந்திர உற்பத்திக் கைத் தொழில் – கட்டால் கட்டுந் தொழில் – நெசவுக் கைத்தொழில் – ஆடை உற்பத்தித் தொழில் – தானியம் அரைத்தல் – மீன்பிடித் தொழில் – இறைச்சி யடித்தல் தொழில்), ‘ஐக்கிய அமெரிக்கா – பிரதேசப் புவியியல் வடகீழ்ப் பிரதேசம்’ (நியூ இங்கிலாந்துப் பிரதேசம் பேரேரிப் பிரதேசம் – வட அப்பலாச்சியன் மத்திய அத்திலாந்திப் பிரதேசம் – மத்திய சமவெளிப் பிரதேசம் தென்கீழ்ப் பிரதேசம் – தென் உண்ணாட்டுத் தாழ் நிலப்பிரதேசம் – விரி குடாக் கரையோரப்பிரதேசம் – புளோரிடாக் குடாநாட்டுப் பிரதேசம் – பெரும் சமவெளிகள் – மேற்குமலைப் பகுதி றொக்கி மலைப்பிரதேசம் – மலையிடை மேட்டு நிலப்பிரதேசம் – கரையோரப் பள்ளத்தாக்குகள் கலிபோர்ணியாப் பிரதேசம் – அலாஸ்காப்பிரதேசம்) ஆகிய நான்கு அத்தியாயங்களில் பிரதேசப் புவியியல் விளக்கப்பட்டுள்ளது. இறுதியில் கடந்த கால பரீட்சை வினாக்களும் இணைக்கப்பட்டுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14568).

ஏனைய பதிவுகள்

12685 – ஐரோப்பிய ஓவிய வரலாற்றுச் சுருக்கம்.

R.H.விலென்ஸ்கி (ஆங்கில மூலம்), யு.ஜோன் ஜோர்ஜ் (தமிழாக்கம்). கொழும்பு: யு.ஜோன் ஜோர்ஜ், 7/13, ஹேன வீதி, கல்கிசை, 1வது பதிப்பு, மாசி 2002. (கொழும்பு: இசுரு என்டர்பிரைஸஸ்). 76 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: