15874 பிரித்தானிய தீவுகளின் புவியியல் (க.பொ.த. உயர்தர வகுப்புக்குரியது).

க.குணராசா. யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை வெளியீடு, 234 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1978. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி).

(4), 54 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 4.00, அளவு:20×13.5 சமீ.

ஐரோப்பாக் கண்டத்தின் வடமேற்கு ஓரத்தில் அத்திலாந்திக் சமுத்திரத்தில் பிரித்தானிய தீவுகள் அமைந்துள்ளன. இத்தீவுகள் இலங்கையைப்போல் ஐந்து மடங்கு பரப்பில் பெரியன. பிரித்தானிய தீவுகளில் பெரிய பிரித்தானியா, அயர்லாந்து என இருபெரும் தீவுகள் உள்ளன. இவற்றைவிட சட்லண்ட் தீவுகள், ஓர்கனிய தீவுகள், கேப்ரிடிஸ் தீவு,  வைற் தீவு, மான் தீவு முதலான அநேக சிறு தீவுகளுமுள்ளன. பிரித்தானிய தீவுகளின் மொத்த நிலப்பரப்பு 1,21,000 சதுர மைல்களாகும். இந்நூல் பிரித்தானிய தீவுகளின் தரைத்தோற்றம், பிரித்தானிய தீவுகளின் காலநிலை, பிரித்தானிய தீவுகளின் பயிர்ச்செய்கை, பிரித்தானிய தீவுகளின் கைத்தொழில், பிரித்தானிய தீவுகளின் குடிப்பரம்பல், பிரித்தானிய தீவுகளின் போக்குவரத்து வசதிகள், பிரித்தானிய தீவுகளின் வர்த்தகம் ஆகிய ஏழு பிரிவுகளின்கீழ் மாணவர்களின் புவியியல் அறிவை விருத்திசெய்யும் நோக்கில்; எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 83484).

ஏனைய பதிவுகள்

12778 – மழையில் நனையும் மனசு(கவிதைகள் ).

தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா. கல்கிசை: பூங்காவனம் இலக்கிய வட்டம், 21நE, ஸ்ரீ தர்மபால வீதி, மவுன்ட் லவீனியா, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை). 120 பக்கம், விலை: ரூபா 400., அளவு:

15579 பேனையை கீழே வைத்துவிடாதே.

மொழிவரதன் (இயற்பெயர்: கருப்பையா மகாலிங்கம்). கொட்டகலை: கொட்டகலை தமிழ்ச் சங்கம், 34/20, மொழி அகம், கணபதிபுரம், 1வது பதிப்பு, நவம்பர் 2020. (நுவரஎலிய: யுனிவர்சல் அச்சகம், ஹட்டன்). x, 120 பக்கம், விலை: ரூபா