15885 சொல்லப்படாத கதை: அனுபவப் பதிவு.

ஆனந்தப்ரசாத். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2019. (சென்னை 600077: மணி ஓப்செட்).

294 பக்கம், விலை: இந்திய ரூபா 350., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-89820-12-6.

சொல்லப்படாத கதையில் ஒரு கடலோடியின் வாழ்வனுபவம் இலக்கிய நயத்துடன் ஒரு நாவல் போன்று 38 அத்தியாயங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வாழ்வின் வழியே ஒரு தமிழ்க் கடலோடியின் சொல்லப்படாத அனுபவங்கள் பல சுவைமிகு அனுபவப் பகிர்வுகளாக இந்நூலில் விரிகின்றன. கிழக்கிலங்கையின் திருக்கோணமலையில் பிறந்தவர் ஆனந்தப்ரசாத். நான்கு வயதில் யாழ்ப்பாணத்திற்குப் புலம்பெயர்ந்தவர். இளம் வயதிலிருந்தே கலை இலக்கியங்களில் ஆழமான ஈடுபாடு கொண்டிருந்த இவர் 1981இல் அரசியற் கெடுபிடிகளால் 26 வயதில் ஊரைவிட்டு வெளியெறி தற்பொதுகனடாவில் மொன்ட்ரியல் நகரில் வாழ்கின்றார். 1975 முதல் எழுதிவந்துள்ள இவரது ஆரம்பகாலக் கவிதைகள், இவரது பிறந்த மண்ணான திருக்கோணமலையில் இராணுவச் சுற்றிவளைப்பின்போது எரித்தழிக்கப்பட்டுவிட்டன. இவரது முன்னைய நூல்கள் ஒரு சுயதரிசனம் (1992), சொட்டு வாழ்வு அல்லது கிணறும் தவளையும் (2017) என்பனவாகும். இது இவரது மூன்றாவது நூல். கனடா ‘தாய்வீடு” பத்திரிகை இதழ்களில் தொடராகப் பிரசுரமானவை.

ஏனைய பதிவுகள்

Better Local casino Software

Articles Try United states Gambling establishment Apps Safe? How do i Learn A United states Gambling enterprise Web site Is safe And you may Secure?