15891 ஆறுமுக நாவலர்: ஒரு பன்முக நோக்கு.

ப.கணேசலிங்கம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 4: நாவலர் நற்பணி மன்றம், இல. 36, நந்தன கார்டன், இணை வெளியீடு, கொழும்பு 6: ஆலயம் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் பதிப்பகம், 39, 36ஆவது ஒழுங்கை).

iv, 68 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 23×16 சமீ., ISBN: 978-955-0881-19-2.

ஈழத்தின் சைவ சமய வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பற்றிய நூல். நாவலர் தோன்றிய சூழல், நாவலர் தாபித்த வண்ணைச் சைவப் பிரகாச வித்தியாசாலை, நாவலர் கல்வி மரபும் இன்றைய தேவையும், இந்திய மறுமலர்ச்சி இயக்கப் பின்னணியில் நாவலர், நாவலரும் இராமநாதனும் ஆகிய ஐந்த தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இலங்கையில் சைவமும் தமிழும் 300 ஆண்டுகளாக அந்நியராட்சியால் சீரழிந்திருந்த நேரத்தில் தோன்றிய ஆறுமுக நாவலர் அவர்கள் தனது உடல், பொருள், ஆவி, அனைத்தையும் ஈந்து செயலாற்றி தமிழ் மக்களின் வரலாற்றில் பெரும் புரட்சியையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தார். தனிமரமாக நின்று நிழல் பரப்பிய இவரது ஆளுமை பற்றிப் பல பேரறிஞர்கள்அவ்வப்போது தத்தம் கோணங்களில் உற்றுநோக்கி வெளியிட்ட அரிய கருத்துக்களைத் தொகுத்து இந்து நாகரிகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. ப.கணேசலிங்கம் அவர்கள் இந்நூலை எழுதியுள்ளார். பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை, பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, பேராசிரியர் இ.குமாரவடிவேல், பேராசிரியர் வி.சிவசாமி, வித்துவான்  கலாநிதி க.சொக்கலிங்கம் ஆகியோரது கனதியான கட்டுரைகளை இந்நூல் தன்னகத்தே கொண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Merlin’s Magic Respins Position

Posts Slots magic casino | Equivalent Ports Merlins Magic Slot Level of Casinos Merlins Miracle Respins Reviewer Advice Really based on how of many respins