வசந்தா வைத்தியநாதன் (மலர் ஆசிரியர்). கொழும்பு 10: பா.சண்முகரத்ன சர்மா, பிரதம குருக்கள், மருதானை கப்பித்தாவத்தை ஸ்ரீபால செல்வவிநாயகமூர்த்தி கோயில், மருதானை, 1வது பதிப்பு, மே 1996. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B, புளுமெண்டால் வீதி).
(154) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×19.5 சமீ.
செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் (வசந்தா வைத்தியநாதன்), தோரண வாயில் (வசந்தா வைத்தியநாதன்), ஆகிய முகவுரைகளுடன் ஆன்மீகர்களின் ஆசியுரைகள், அறிஞர்களின் பாராட்டுரைகள், கலைஞர்களின் போற்றியுரைகள் ஆகியன மலரின் முற்பகுதியிலும், அதனைத் தொடர்ந்து, கொழும்பு கப்பித்தாவத்தை ஸ்ரீ பால செல்வ விநாயகர் ஆலய பிரதமகுரு பிரம்மஸ்ரீ சண்முகசர்மா ஜே.பி.அவர்களின் 90 அகவைப்பூர்த்தி குறித்த வாழ்த்துப்பா (வ.சிவராசசிங்கம்), சதாயுஷ்ய புருஷர் சண்முகரட்ண சர்மா – ராம்.தேவலோகேஸ்வரக் குருக்கள் மங்கள நலன் பெற்று நெடிது வாழ்க வாழ்கவே (துனையூர் ராம். தேவலோகேஸ்வரக் குருக்கள்), சதாபிஷேக வாழ்த்து (அருட்கவி வேலணை வேணியன்), பிரம்மஸ்ரீ பா.சண்முகரத்தின சர்மா அவர்களின் பூர்த்தி விழாவை முன்னிட்டு ஒர் அன்பனின் சமர்ப்பணம் (க.சிவரஞ்சன்), ஆகிய கவியாக்கங்களும், திருக்கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் (வ.சிவராசசிங்கம்), கனாகாபிஷேக வைபவம் (உரை- காஞ்சிப் பெரியவர்), கும்பாபிடேகம் பெரும் சாந்தி (சிவஸ்ரீ ஐ.கைலாசநாதக் குருக்கள்), வேதம்: ஸ்ரீ பரமசிவனே சிறந்த வைத்தியன் (சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர்), ஆலய – நகர அமைப்புக்கள் (திருவாடானை சிவஸ்ரீ.ஆ.ஐயாமணி சிவம்), மறை மதித்த மருத்துவன் (மு.இராஜகோபால சாஸ்திரி), நித்ய பூஜா கிரியா விளக்கம் (இலங்கை இந்துமத குரு பீடாதிபதி அருள்ஜோதி ஸ்கந்த சாம்பசிவ சிவாச்சாரியார்), நன்றியுரை (பா.சண்முகரத்தின சர்மா, ச.இராஜலக்ஷ்மி) ஆகிய கட்டுரை ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24123).