15896 நெஞ்சம் மறப்பதில்லை: பிரம்மஸ்ரீ இரத்தின சபாபதிக் குருக்கள் குமாரசாமி சர்மா, ஸ்ரீமதி பார்வதி தம்பதிகளின் சதாபிஷேக சிறப்பு மலர்.

இ.குமாரசாமி சர்மா (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவர் கும்பாபிஷேக தின வெளியீடு, பிரம்மஸ்ரீ இ.குமரசாமி சர்மா, ஓய்வுநிலை உதவி திட்டமிடல் பணிப்பாளர், வண்ணார்பண்ணை, 1வது பதிப்பு, 2021. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

174 பக்கம், 70 படத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

இந்நூல் இறையியல், இயல் இசை வாரிதிகள், இசைநாத சங்கமம், ஆன்மீக சிந்தனைகள், ஸ்தோத்திரங்கள் ஆகிய ஐந்து பிரிவுகளாக வகுப்பட்டுள்ளது. ‘இறையியல்” என்ற முதலாவது பிரிவின் கீழ் விநாயகர் வழிபாடு, அருள்மிகு காட்டுத்துறை விநாயகர் கும்பாபிஷேக நிகழ்வும் கோபுரமும், அருள்மிகு ஞானவைரவர் கோவில் வரலாறு, ஆலயம், கும்பாபிஷேகமும் அதன் தத்துவமும், கொடியேற்ற விழா எனும் தெய்வீக நிகழ்வு, நல்லூர் கந்தன் மகோற்சவ நிகழ்வில் பல்வேறு ஆன்மீக வைபவங்கள் ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ‘இயல் இசை வாரிதிகள்’ என்ற இரண்டாவது பிரிவில் தெய்வீகப் பணியாற்றும் அந்தண சிவாச்சாரிய திலகங்கள், கலைக் குடும்பத்தினரின் இசை அர்ச்சனை, இளம் ஜாம்பவான்களான கே.பி.குமரன்-பி.எஸ்.பாலமுருகன் இசைநாத சங்கமம், அகில இலங்கை கம்பன் கழக கம்பவாரிதி, சென்னையில் மார்கழி மாத சங்கீத விழா ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ‘இசைநாத சங்கமம்” என்ற மூன்றாம் பிரிவில் அவுஸ்திரேலிய வாழ்வும் ஆன்மீகமும், ஆன்மீக நெறிகள் வழிபாடுகள் சிந்தனைகள்: நமது வாழ்க்கையில் சமயச் சடங்குகள், ஸ்தோத்திரங்கள் பாடல்கள் ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. ‘ஆன்மீகச் சிந்தனைகள்’ என்ற நான்காவது பிரிவில் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம், மாங்கல்யம், விளக்க பூஜை, சுமங்கலி பூஜை, சுமங்கலிப் பிரார்த்தனை, நவராத்திரி விரதம், ஐயப்ப தரிசனம், கிருஷ்ண ஜெயந்தி, கார்த்திகை விளக்கீடு, காரடையான் நோன்பு, மாதங்களில் சிறந்த மார்கழி, தாய் தந்தை, ஞானத்தைத் தரும் இசை, அக்னி, ஆன்மீக வழிகள், தீபம், ஆலய வழிபாடுகள், வீபூதி மஞ்சள் மகிமை, தூய தீபம், கற்பூர ஆராதனை, ஆலய வழிபாடு விளக்கம், நைவேத்தியம், கும்பம் வைத்தல், பக்தி, தீபாவளி, நவக்கிரகங்கள், நாம சங்கீர்த்தனம் ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இறுதிப் பிரிவாக ‘ஸ்தோத்திரங்கள்” தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

15569 நீர்ப்பறவை.

கவிப்பிரகா (இயற்பெயர்: குணரெத்தினம் தனுஷன்). நெடுந்தீவு: குணரெத்தினம் தனுஷன், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப ஆசிரியர், நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம், 1வது பதிப்பு, டிசம்பர் 2020. (நெடுந்தீவு: பப்பிட்டர் ஸ்டூடியோஸ்). (14), 108 பக்கம், விலை:

17129 இலக்கிய மரபுகளால் பெரிதும் அறியப்படும் இருபதாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட யாழ்ப்பாணத்து இந்து ஆலயங்கள்.

சண்முகலிங்கம் சஜீலன்;. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஏப்ரல் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 24 பக்கம், விலை: ரூபா 200.,