15903 உறுதி குலையாத உள்ளத்தின் நினைவாக: கிருஷ்ணபிள்ளை சிவஞானம்: 1946-2002.

வீ.தனபாலசிங்கம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: மார்க்சிய கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையம், 1வது பதிப்பு, ஜனவரி 2003. (கொழும்பு 6: நியூ பிரின்ட் கிரபிக்ஸ், 289-1/2 காலி வீதி, வெள்ளவத்தை).

iv, 151 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.

தேசிய கலை இலக்கியப் பேரவையின் தொடக்க கால உறுப்பினாக இருந்து அதன் ஆரம்ப வளர்ச்சியில் பங்குகொண்டு உழைத்து அண்மையில் மறைந்த கிருஷ்ணபிள்ளை சிவஞானம் (15.01.1946-01.11.2002) அவர்களின் நினைவுமலர். புகையிரத நிலைய அதிபராக 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய இவர் கொழும்பு கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்தில் நிலைய அதிபராக இறுதியாகக் கடமையாற்றியவர். இடதுசாரி அரசியலில் ஆர்வம் காட்டிய இவர் இறுதிவரை மார்க்சியவாதியாகவே வாழ்ந்து மறைந்தார். அவரது மறைவையொட்டி வெளியிடப்பட்டுள்ள இம்மலரில் பல்வேறு இடதுசாரிச் சிந்தனையாளர்களும், குடும்பத்தினரும், புகையிரதத் திணைக்கள நிர்வாகத்தினரும், பரந்த நட்பு வட்டத்தினரும் தத்தமது அஞ்சலிகளை கட்டுரை, கவிதை வடிவில் பதிவுசெய்துள்ளனர்.

ஏனைய பதிவுகள்

Toki Day Slot Review

Content Betsson Casino Reduced Choice How can Rule Variations Dictate the house Line? The very first Keno Terminology to know Jumbo Dollars Lotto (six in