என்.சரவணன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xv, 91 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 375., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-757-8.
இலங்கையை உலுக்கிய முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக பண்டாரநாயக்கவின் கொலையைக் காணமுடியும். இலங்கையின் சிங்களத்தனத்தையும், பௌத்தத்தனத்தையும் ஒன்றுசேரக் கட்டியெழுப்புவதைத் தனது அரசியல் நிகழ்ச்சி நிரலின் பிரதான அங்கமாக மாற்றிக்கொண்டவர் பண்டாரநாயக்க. ஆனால் பின்னாளில் அதே சிங்கள பௌத்த சக்திகளின் சதியால் கொலை செய்யப்பட்டவர். இதில் வியப்பாகப் பார்க்கப்படுவது அக்கொலையில் ஈடுபட்ட பிரதானமான இருவரும் பௌத்த பிக்குகள் என்பதுதான். புத்தரக்கித்த தேரர், சோமராம தேரர் ஆகிய இரு பௌத்த தறவிகளுக்கும் இறுதியில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த முக்கிய கொலையில் அதிர்ச்சி தரத்தக்க அடுத்த விடயம், இன்றுவரை அக்கொலைக்கான வலுவான காரணம் கண்டுபிடிக்கப்படாமை தான். இந்நூல் அக்கொலைக்கு ஏதுவான காரணங்களாகக் கருதப்படுகின்ற பல்வேறு காரணிகளைத் தொகுத்து வழங்குகின்றது. இக்கொலை தொடர்பாகத் தமிழில் விரிவான விளக்கங்களுடன் வெளிவரும் முக்கியமான நூல் இது. பண்டாரநாயக்க கொலையின் மர்ம முடிச்சுகள், புத்த ரக்கித்த தேரர்: பண்டாரநாயக்க கொலையின் சூத்திரதாரி, பண்டாரநாயக்கவைக் கொன்ற பண்டாரநாயக்கவாதிகள், இலங்கையை ஆளும் விஜேவர்தன பரம்பரை, பண்டாரநாயக்க கொலையில் சிஐஏ, பண்டாரநாயக்கவின் வர்க்க, வம்சாவளிப் பின்புலம், பண்டாரநாயக்க கால முக்கிய நிகழ்வுக் கால நிகழ்வுகள் ஆகிய ஏழு அத்தியாயங்களில் இந்நூல் விரிந்துள்ளது.
மேலும் பார்க்க: தங்கத்துரைக் காவியம்.15653