15914 சாதனைச் சிகரம் மைமூனா செயினுலாப்தீன்.

செ.திருநாவுக்கரசு. யாழ்ப்பாணம்: கலாநிதி செ.திருநாவுக்கரசு, 15, பண்டாரக்குளம் வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பதிப்பகம், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு).

xii, 112 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ., ISBN: 978-955-35879-0-9.

நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் ஸ்தாபகரும், ஓய்வுநிலை அதிபருமாகிய ஹாஜியானி மைமூனா செயினுலாப்தீன் அவர்களின் கல்வி-சமூகப் பணிகள் பற்றிய நூல். நிந்தவூரின் முதலாவது பயிற்றப்பட்ட ஆசிரியையாகவும், தமிழ் மிகக் கற்றறிந்த பண்டிதையாகவும், அல் மஷ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் ஸ்தாபகராகவும் ஹாஜியானி மைமூனா செயினுலாப்தீன் (நல்லம்மா டீச்சர்) அவர்கள் உருவாவதற்கு உயர் பெண்மணி அமரர் மகிழம்மா அவர்களே காரணகர்த்தாவாக இருந்திருக்கிறார். நிந்தவூரைத் தன் சொந்தவூராகக் கருதி சுமார் 15 வருடங்கள் ஒரு சாதாரண பெண் பாடசாலையை ஒரு பெரும் கல்வி நிறுவனமாக உருவாக்கியதுடன் மட்டுமல்லாது, திருமதி செயினுலாப்தீன் (நல்லம்மா டீச்சர்) அவர்களை 5 ம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சைக்காக தயாரித்து அனுப்பி அகில இலங்கையிலும் முதலாம் இடத்தைப் பெறவைத்ததோடு மட்டுமல்லாது அவரை யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பி பயிற்சிபெற வைத்து, தமிழில் பாண்டித்தியம் பெற்ற பண்டிதையாக்கி தான் விட்ட இடத்திலிருந்து கல்விப்பணியைத் தொடர்ந்து வழிநடாத்த தனது வாரிசாக்கினார். அந்த வாரிசின் வாழ்வும் பணிகளுமே இந்நூலை அலங்கரிக்கின்றன.

ஏனைய பதிவுகள்

17656 கடவுள் தான் அனுப்பினாரா?: சிறுகதைகள்.

ராணி சீதரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 110 பக்கம், விலை: ரூபா 550.,