15928 இசையும் மரபும்.

த.சண்முகசுந்தரம். தெல்லிப்பழை: மரபின் மேன்மை தொடர்- 3, கலைப் பெருமன்றம், அம்பனை, 1வது பதிப்பு, மார்கழி 1974. (தெல்லிப்பழை: குகன் அச்சகம்).

(4), 32 பக்கம், புகைப்படங்கள், அளவு: 18×12சமீ.

இந்நூலில் நாயகர்களாக விளங்குபவர்கள் நாதஸ்வரக் கலைப் பேராசான் மாவிட்டபுரம் இராசா, பன்னிசைப் பெரும்புலவர் கீரிமலை செல்லையா, தவிற் கலைப் பேராசான் மூளாய் ஆறுமுகம் ஆகியோராவர். இம்மூவரைப் பற்றிய உரைகளில் முதலாவதாக உள்ள  ‘நான் கற்றவை மற்றவருக்குஞ் சுவறவே முருகன் எனக்கு வித்தையைத் தந்தான்’ என்ற உரை மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் ஆதீன நாதஸ்வர வித்தவான் சு.க.இராசா அவர்கள் அளித்த நேர்முக உரையின் தொகுப்பாகும். இதுவரை ஈழத்தில் நாதசுரக் கலைஞர்கள் ஐம்பது பேரை உருவாக்கியவர் இவர். தான் பெற்ற கல்வி பற்றியும், தான் சொல்லிக் கொடுக்கின்ற கல்வி பற்றியும் இங்கு விபரித்திருக்கிறார். இரண்டாவது உரை ‘பண்ணும் கூத்தும் இந்த மண் இருக்கும் வரை நிலைக்கும்’ என்பதாகும். தமிழ்ப் பண்ணிசைக்கும் கொட்டகைக் கூத்துக் கலைக்கும் தன் வாழ்நாள் முழுவதையும் பயன்தரு முறையில் செலவுசெய்த கீரிமலையைச் சேர்ந்த வீரசைவர் தமிழ்க் கலைச்சுடர் த.செல்லையா அவர்களின் நேர்முக உரையின் தொகுப்பாகும். இறுதியாக உள்ள மூன்றாவது உரை ‘அப்பனை செவிக்கின்றேன் செப்பமாகத் தவில் வித்தையைப் போதிக்கின்றேன்’ என்ற உரை, பிரபல தவில் வித்துவான் மூளாய் ஆ.வை.ஆறுமுகம் அவர்கள் அளித்த நேர்முக உரையின் தொகுப்பாகும். இசை உலகிற்கு இவர் அளித்த இணையற்ற செல்வம், மகன் வலங்கைமான் சண்முகசுந்தரம். ஈழத்தின் தவில் வித்துவான்கள் பலரை இவர் உருவாக்கியுள்ளார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 77171).

மேலும் பார்க்க: இளையராஜாவும் இசைக் கருவிகளும். 15383

ஏனைய பதிவுகள்

12877 – யாழ்ப்பாணப் புவியியலாளன்: இதழ் 5 (1987/1988).

கே.சுதாகர் (இதழ் ஆசிரியர்), S.T.B. இராஜேஸ்வரன் (ஆலோசக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: புவியியற் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1988. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம்). x, 150 பக்கம், தகடுகள்,