15931 பாலு மகேந்திரா நினைவுகள்.

செ.கணேசலிங்கன். சென்னை 600026: குமரன் பதிப்பகம், 3 மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி, 7வது தெரு, வடபழநி, 1வது பதிப்பு, மே 2015. (சென்னை 600026: குமரன் பதிப்பகம், 3 மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி, 7வது தெரு, வடபழநி).

160 பக்கம், விலை: இந்திய ரூபா 60.00, அளவு: 18×12 சமீ.

திரைப்பட ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திராவின் மறைவின் பின் அவருடனான தொடர்புகளையும் அவதானிப்புகளையும் நூலுருவில் சுவையான நினைவுக் குறிப்புகளாக வழங்கியுள்ளார். ஆரம்ப நினைவுகள், ‘அம்மா வந்தாள்’ பூனா தொடர்பு, பாலுவின் தீர்மானம், கோகிலா ஆரம்பம், கமலும் கோகிலாவும், இசையும் முடிவும், கோகிலா வெளியீடு, ஒரு சோக வரலாறும் மீட்சியும், மூன்றாம் பிறை ஏற்றம், உதவி டைரக்டர் மூர்த்தி, கலையும் சுவையும், நடிகர் நடிகையர், வீடும் நிலமும், சினிமாப் பட்டறை, கதை நேரம், இறுதிக் காலத்தில், ஆரம்பக் கல்வி, மலையாளப் படங்கள், தயாரிப்பு முயற்சிகள், நடைமுறையும் கலையும், பிடித்த உணவுகள், சினிமாக் கல்வி, உலக சினிமாவில், சினிமாவில் முகபாவம் உடல்மொழி, பாலுவின் முதற்படம், இலக்கிய வடிவமும் சினிமாவும், சினிமா உலகமும் தயாரிப்பும், மருத்துவமனையில், சில சம்பவங்கள், கடைசி நாட்கள், வள்ளுவர் கூற்று ஆகிய 31 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவில், சிறப்பாக தமிழ்நாட்டில் சினிமா மேடை நாடகத்திலிருந்து பிறந்தது என்றும்  அங்கிருந்தே வளர்க்கப்பட்டது என்றும் கூறுவர். சினிமா ஒரு தனி மொழி என பூனே திரைப்படக் கல்லூரியில் கற்பிக்கப்பட்டது. அத் தனிமொழியைக் கற்றவரில் ஒருவர் பாலுமகேந்திரா. இந்திய சினிமாவின் மேம்பட்டுக்கு உழைத்தவர். அன்னாரின் பங்களிப்பை இச்சிறுநூல் ஆராய்கின்றது.

ஏனைய பதிவுகள்

No-deposit Incentives 2024

Blogs Choosing A knowledgeable Bitcoin Slot Website To you personally 7bit Casino 20 Totally free Revolves No deposit Get in on the Enjoyable That have