பால.சுகுமார் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: அனாமிகா வெளியீட்டகம், இல. 48, பெய்லி முதலாம் குறுக்குத் தெரு, இணை வெளியீடு, மட்டக்களப்பு: மைக்கல் கொலின், மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, மார்கழி 2020. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி).
24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
மட்டக்களப்பின் கலை இலக்கியவாதியான வீ.ஆனந்தன் அவர்களின் மறைவின் 25ஆவது ஆண்டு நிறைவின் நினைவாக அவர் பற்றிய பல்வேறு நண்பர்களின் நினைவுப்பதிகைகளின் தொகுப்பாக இச்சிறு நூல் வெளிவந்துள்ளது. மலையாள இசை மற்றும் மலையாள இலக்கியத்தில் மிகுந்த பரிச்சயம் உள்ளவர் என்ற வகையில் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கும் ஆற்றலால் சில சிறுகதைகளை மொழி பெயர்த்துமுள்ளார். இந்நூலாசிரியர் பால.சுகுமார் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட முன்னாள் பீடாதிபதி, நுண்கலைத்துறை தலைவர், சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிலையத்தின் இணைப்பாளராகக் கடமையாற்றியவர். ஈழத்து இசை, நடன, நாடக புலமையாளர்.