செ.திருநாவுக்கரசு. சென்னை 600078: தோழமை வெளியீடு, 19/665, 48ஆவது தெரு, 9ஆவது செக்டார், கே.கே.நகர், 1வது பதிப்பு, ஜனவரி 2018. (சென்னை 600078: தோழமை பதிப்பகம், 19/665, 48ஆவது தெரு).
(2), 766 பக்கம், விலை: இந்திய ரூபா 750., அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-93-80369-66-2.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செ.திருநாவுக்கரசு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும், சித்த மருத்துவத்துறையில் விரிவுரையாளராகவும் பணியாற்றுபவர். சமயம், சமூகம், கல இலக்கியம் எனப் பல துறைகளிலும் செயற்பட்டவர். அதற்காகப் பல விருதுகளையும் பெற்றவர். அதன் தொடர்ச்சியாக உடுமலை தந்த கவிமலை எனும் இந்த நூலை எழுதியுள்ளார். இந்நூல் தமிழகத்தின் உடுமலைப்பேட்டை நாராயண கவிராயர் பற்றிய பல்வேறு சிறப்புகளையும் ஆராய்ந்து கூறும் தனி நூலாக வெளிவந்துள்ளது. உடுமலை நாராயணகவியின் வாழ்வியல், உடுமலை நாராயணகவியின் நாடகப் பாடல்கள், உடுமலை நாராயணகவியின் திரைப்படப்பாடல்கள், உடுமலை நாராயணகவியின் தனிப்பாடல்கள், உடுமலையார் பங்களிப்புச் செய்த ஏனைய துறைகள், ஆய்வு நிலையில் உடுமலை நாராயணகவி ஆகிய ஆறு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.