15944 ஒளவையார்: இலக்கியச் செல்வம் மலர் 1.

பண்டிதர் க.இராசையா. யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1955. (யாழ்ப்பாணம்: நாமகள் அச்சகம், 351, நாவலர் சந்தி).

x, 80 பக்கம், விலை: 85 சதம், அளவு: 18.5×10 சமீ.

தமிழ் மூதாட்டி ஒளவையாரின் வாழ்க்கையை 27 அத்தியாயங்களில் இந்நூல் விளக்குகின்றது. பிறப்பு, அதியமானிடம் நெல்லிக்கனி பெறுதல், எழினிக்குத் துணைபுரிதல், பெருநற்கிள்ளியைச் சந்தித்தல், பாரியுடன் பழகல், காரியின் பேரன்பு, பாரி மகளிர் நற்பண்பு, பாரி மகளிரின் நிலைமையுணர்தல், அங்கவை-சங்கவை திருமணம், திருமணத்தில் விருந்தளித்தல், பொன் ஆடு பெறுதல், ஆட்டிடையன் புகழ்பெற்றது, குடியானவன் துறவுபூணல், பட்ட பலாமரம் தழைக்கப் பாடுதல், நாலு கோடி செய்யுட்கள் பாடுதல், பொன் ஊஞ்சல் அறும்படி பாடியது, முருகன் செந்தமிழ்ப் பாடல் கேட்டல், கணிகை மாது பாடல் பெற்றது, பேய்க்கு நல்வரம் அருளியது, ‘வரப்புயர’ என வாழ்த்தியது, தெய்வீக சக்தி, பொருட் செல்வத்திலும் கல்விச் செல்வம் மேன்மையுடையது என்று கூறியது, கம்பரின் செருக்கை அகற்றியது, புலவர்களின் தாரதம்மியத்தை விளக்கியது, இறைவன் திருவருளால் திருக்கைலாய மலைக்குச் சென்றது, ஒளவையார் அருளிய சில அரிய போதனைகள், செய்யுட் பொருள் விளக்கம் ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 9066).

ஏனைய பதிவுகள்