15949 சொற்களில் சுழலும் உலகம்: அனுபவப் பதிவுகள்.

செல்வம் அருளானந்தம். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2019. (சென்னை 600077: மணி ஓப்செட்).

160 பக்கம், விலை: இந்திய ரூபா 190., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-89820-33-1.

‘கண்ணீரின் சுவை கரிப்பல்ல. இனிப்பு என்று செல்வம் அருளானந்தம் அறிவித்தால் மறுக்காமல் ஏற்றுக்கொள்ளலாம். ஏனெனில் அவர் சொற்களின் ரசவாதி. தரித்து நிற்க காலடி மண் இல்லாமல் போன துயரை, புலம்பெயர்ந்து திசைதேடிய அலைச்சலை, புகலிட வாழ்வின் திணறலை, அந்நியப் பண்பாடு ஏற்படுத்தும் அதிர்வுகளை பகடிப் புன்னகையுடனும் சமயங்களில் அங்கதப் பெரும் சிரிப்புடனும் பகிர்ந்துகொள்கிறார். அவரது சொற்களின் சுழற்சியில் நாம் காண்பவை மென்னகையில் உறைந்திருக்கும் கண்ணீரின் கதைகள். குருதி பிசுபிசுக்கும் அனுபவங்கள்’. -சுகுமாரன். யாழ்ப்பாண மாவட்டத்தின் சில்லாலைக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் செல்வம் அருளானந்தம். தற்போது கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். ‘பார்வை’ சிற்றிதழின் ஆசிரியராகவும், ‘தேடல்’ சிற்றிதழின் ஆசிரியர் குழுவிலும் செயற்பட்டு வந்தவர். கடந்த முப்பது ஆண்டுகளாக வெளிவரும் ‘காலம்’ இலக்கிய இதழின் ஆசிரியருமாவார். இந்நூலில் நுப்பதும் முப்பத்தேழு ட்றக்கும், வாய்ப்பாணம் (2 பதிவுகள்), உன் சேலை தானே வண்ணப்பூஞ்சோலை தானே? கானாள நிலமகளைக் கைவிட்டுப் போனானை (4 பதிவுகள்), பொய்யும் பழங்கதையும், சடங்கு, பங்கிராஸ் அண்ணர், எள்ளிருக்கும் இடமின்றி உயிர் இருக்கும் இடம்நாடி, இம்மானுவேல் (2 பதிவுகள்), மண் கடன் (8 பதிவுகள்), ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட நினைவுப் பதிகைகள் இவை.

ஏனைய பதிவுகள்

16238 மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள்.

பி.மாணிக்கவாசகம். வவுனியா: தனேத்ரா வெளியீட்டகம், 7/3, 10ஆவது ஒழுங்கை, வைரவ புளியங்குளம், 1வது பதிப்பு, நவம்பர் 2021. (வவுனியா: பொய்கை பதிப்பகம், கந்தசாமி கோவில் வீதி). xxii, 536 பக்கம், விலை: ரூபா 1200.,