15959 ஜீவநதி: அ.யேசுராசா சிறப்பிதழ்: இதழ் 156, ஆவணி 2021.

க.பரணீதரன் (ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆவணி 2021. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், இல. 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

72 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 29.5×20.5 சமீ.

ஈழத்து கலை இலக்கிய உலகில் ஒளிரும் ஒரு நட்சத்திரம் அ.யேசுராசா (க.பரணீதரன்), அ.யேசுராசா கவிதைகள் (எம்.ஏ.நுஹ்மான்), தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் (உடுவில் அரவிந்தன்), நல்லம்மாவின் நெருப்புச்சட்டி-கவிதை (அ.யேசுராசா), காலம் கரைத்திடாத பெருவெளி: அலையை முன்வைத்து உசாவுதல் (சி.ரமேஷ்), ஓர் இதயம் வறுமை கொண்டிருக்கிறது (அ.யேசுராசா), இலக்கிய ஆளுமை அ.யேசுராசாவின் -நினைவுக் குறிப்புகள் (தெளிவத்தை ஜோசப்), பனிமழை (தமிழாக்கம் அ.யேசுராசா), உன்னத ஆளுமையின் உரைகல் ‘தெரிதல்’ (இ.சு.முரளிதரன்), இலக்கிய நட்பு-அனுபவங்கள் (குப்பிழான் ஐ.சண்முகன்), ஊருணி நீர் நிறைந்தற்றே: ஈழத்துப் புலமைத்துவச் சூழலில் கவிதை இதழின் பங்கும் பணியும் (தி.செல்வமனோகரன்), விமர்சன வெளியில் தனித்த குரலாய் அ.யேசுராசா (அம்ஷன் குமார்), தீவிர வாசகனின் இலக்கியக் குறிப்புகள் குறிப்பேட்டிலிருந்து (ராஜமார்த்தாண்டன்), படம் பார்த்த பிறகு (அ.யேசுராசா), அ.யேசுராசா அவர்களின் ‘பனி மழை’ யில் ஆயுள் தீர நனைந்து (கெக்கிறாவ ஸ{லைஹா), தூவானம் ஓர் ஆற்றுப்படை (தேவமுகுந்தன்), அ.யேசுராசாவின் பதிவுகள் (அருண்மொழிவர்மன்), அ.யேசுராசா பற்றி (இ.பத்மநாப ஐயர்), அ.யேசுராசாவின் ‘நினைவுக் குறிப்புகள்’ தொடர்பான சில குறிப்புகள் (எஸ்.கே.விக்னேஸ்வரன்), ஈழத்து நவீன இலக்கிய வரலாற்றின் ஒரு திசைகாட்டியாய் அ.யேசுராசா (தருமராசா அஜந்தகுமார்), ’நிழல்கள்’ ஒரு பார்வை (சி.ரகுராம்), ஈழத்து நவீன இலக்கியச் செல்நெறியில் அ.யேசுராசாவின் சில தடங்கள் (செ.யோகராசா), கடிதங்கள் ஆகிய ஆக்கங்களை இச்சிறப்பிதழ் கொண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

16100 நல்லைக்குமரன் மலர் 2001.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2001. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). 130 + (46) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: