15963 பண்டைய இலங்கை.

வே.க.நடராசா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

x, 468 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-659-402-7.

1966, 1973 ஆகிய இரண்டு ஆண்டுகளில் பண்டைய ஈழம் என்ற பெயரில் இரண்டு பாகங்களாக வெளிவந்திருந்த நூல் ‘பண்டைய இலங்கை’ என்ற தலைப்புடன் இப்பொழுது தனி நூலாக வெளிவந்துள்ளது. நூலில் முதலாவது பதிப்பு, 1968 எனவும், மீள்பதிப்பு 2016 எனவும் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றை அறிய விரும்பும் மாணவர், ஆசிரியர், பொது வாசகர் ஆகிய அனைத்துத் தரப்பினரின் தேவையையும் பூர்த்தி செய்கின்றது. இந்நூலின் அத்தியாயங்களின் அமைப்பிலும் ஒரு திட்டமுறை கையாளப்பட்டுள்ளது. அத்தியாயத் தொடக்கத்தில், அத்தியாயத்தில் கூறப்படும் காலப்பகுதியில் இலங்கையைப் பாதித்த அயல்நாட்டு விருத்திகள் தரப்பட்டுள்ளன. இலங்கை வரலாற்று நிகழ்ச்சிகள் அல்லது விருத்திகளில் முக்கியமானவை சற்று விரிவாகவும், முக்கியத்துவம் குறைந்தவை சுருக்கமாகவும் கூறப்பட்டபின், அயல்நாட்டுத் தொடர்புகளின் பாதிப்பு விபரிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாய முடிவில் தரப்பட்டுள்ள பயிற்சிகள், புதிய அறிவைப்பெறவும் விருத்திசெய்யவும் உதவுகின்றன. இலங்கை வரலாற்று மூலங்கள், இலங்கை வரலாற்றின் புவியியற் பின்னணி, இலங்கைக்கு ஆரியர் வருகையும், அவர்களது குடியேற்றங்களும், பௌத்தம் பரவமுன் இலங்கை: அனுராதபுரத்தின் எழுச்சி, பௌத்தத்தின் தோற்றமும், வளர்ச்சியும்: இலங்கைக்கு பௌத்தம் பரவல், துட்டகாமணியும் இலங்கையின் விடுதலையும், துட்டகாமணியின் பின்னோரும் சமய விருத்திகளும், முதலாம் இலம்பகண்ண மரபினரின் ஆட்சி: மகாயான பௌத்தம் பரவுதல், சிறிமேகவண்ணனும் பின்னோரும்: குப்தப் பண்பாட்டின் செல்வாக்கு, மோரிய மரபினர்-தாதுசேனனும் காசியப்பனும், இலம்பகண்ணரும் மோரியரும்: ஒரு நூற்றாண்டுக்கால அமைதி, அரசுரிமைப் போட்டிகளும் உள்நாட்டுப் போர்களும்: தமிழர் செல்வாக்குப் பரவுதல், மானவர்மன் மரபினரின் ஆட்சி: பாண்டியத் தொடர்புகள், சோழரின் எழுச்சியும் அநுராதபுரத்தின் வீழ்ச்சியும், அநுராதபுர காலப் பண்பாடு: அரசியல், சமூக, பொருளியல் நிலைமைகள், அநுராதபுரகாலப் பண்பாடு-2: சமய, இலக்கிய, கலை வளர்ச்சிகள், சோழராட்சியில் இலங்கை: விளைவுகள், விஜயபாகுவும் விடுதலை இயக்கமும், மகாபராக்கிரமபாகு, தென்கிழக்காசிய நாடுகளும் இலங்கையும், கலிங்கமன்னரின் ஆட்சி: பொலன்னறுவையின் வீழ்ச்சி, பொலன்னறுவை காலப் பண்பாடு, தம்பதெனிய அரசு: பாண்டியர் செல்வாக்குப் பரவல், யாழ்ப்பாண அரசும் கம்பளை ஆட்சியாளரும், கோட்டை அரசின் எழுச்சி: ஆறாம் பராக்கிரமபாகு, பிந்திய காலச் சிங்களப் பண்பாடு ஆகிய 26 அத்தியாயங்களில் இலங்கை வரலாற்றை இலகு தமிழில் விபரிக்கும் நூல் இது. வேலுப்பிள்ளை கந்தையா நடராசா (1931-1984) கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளமாணிப் பட்டத்தினைப் பெற்றவர். யாழ்.மத்திய கல்லூரி, நெல்லியடி மத்திய கல்லூரி, ஆகிவற்றில் ஆசிரியராகப் பணியாற்றியவர். கல்லூரி அதிபராக ஓய்வுபெற்றவர்.

ஏனைய பதிவுகள்

Scorepredictor

Content Berlin e-prix 2024 | Delight in Around fifty In the Choice Credit! Leagues The best Free Gaming Tricks for Daily Highest Possibility Resources How