15972 வங்கம் தந்த பாடம்.

அ.அமிர்தலிங்கம். பண்ணாகம்: அண்ணா கலை மன்றம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1973. (அளவெட்டி: ஜெயா அச்சகம்).

viii, 24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.

பண்ணாகம், அண்ணா கலை மன்றத்தின் காப்பாளரும் அரசியல்வாதியுமான அ.அமிர்தலிங்கம்  09.01.1972 இல் காங்கேசன்துறை இளந் தமிழர் மன்றத்தின் ஆதரவில் தந்தை செல்வாவின் தலைமையில் நடத்திய வங்காள தேச வெற்றிவிழாவில் நிகழ்த்திய சொற்பொழிவின் எழுத்துரு இதுவாகும். இவ்வுரையில் வங்க மக்களின் கண்ணீர்க் கதையை, தியாக வரலாற்றை, பாக்கிஸ்தான் அதிபர் யஹியாகானின் இனப்படுகொலை வெறியாட்டத்தை, அவர் இழைத்த கொடுமைகளைப் பற்றியெல்லாம் இவ்வுரையில் தலைவர் அமிர்தலிங்கம் எடுத்துரைக்கின்றார். ஈழத் தமிழரின் இனப்பிரச்சினைக்கும் வங்க மக்களின் பிரச்சினைகளுக்கும் இடையே உள்ள ஒப்புவமைகளையும் பொருத்திப்பார்க்கின்றார். யஹியாகானின் இனக்கொலைக் கொடுமைகளை சிங்கள ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளுடன் ஒப்பிடுகின்றார். பங்களாதேஷின் சுதந்திர மலர்வு ஈழத்தின் மலர்வுக்கு வழியமைக்கவேண்டும் என விரும்புகின்றார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 75548).

ஏனைய பதிவுகள்

bplay: Santa’s Great Gifts

Content Como ganhar giros dado em casinos online? | Roleta Ao Vivo dinheiro real online Santa’s Great Gifts Slot – FAQ Que functiona RTP brjogo?