நிஜத்தடன் நிலவன். அவுஸ்திரேலியா: உயிர்ப்பூ வெளியீட்டுப் பிரிவு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (இந்தியா: அச்சக விபரம் தரப்படவில்லை)
352 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, விலை: அவுஸ்திரேலிய டொலர் 75.00, அளவு: 25×18.5 சமீ., ISBN: 978-164-13-6021-0.
தமிழர் தாயகத்தில் தமிழ்மக்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்ட சாட்சியமற்ற இனவழிப்பு நடவடிக்கைகளின் அழியாச் சாட்சியமாக தப்பிப் பிழைத்த மக்களின் நேர்காணல்களின் தொகுப்பு இது. புகைப்பட சாட்சியங்களையும் உள்ளடக்கியது. புலம்பெயர் வாழ் ஈழத்து இளம் படைப்பாளியான ‘நிஜத்தடன் நிலவனின்’ உருவாக்கத்தில் உயிர்ப்பூ வெளியீடாக உருவாகியிருக்கும் ‘வலிசுமந்த நினைவுகள்’ நூலானது சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளரின் தமிழினப் படுகொலை வரலாற்றின் வடுக்களை தமது உடல்களிலும் உள்ளங்களிலும் நினைவுகளிலும் சுமந்து உயிர் சாட்சியாக திகழ்ந்து வருபவர்களின் நேர்காணல் தொகுப்பாகும். தமிழினப் படுகொலை வரலாறு திட்டமிட்டு மறக்கடிக்கப்பட்டு வரும் இன்றைய சூழலில் வலி சுமந்தவர்களின் நினைவுகளை அடைகாத்து உலகத்தார் மனச்சாட்சியின் முன் ஆவணத் தொகுப்பாக கொண்டு வந்திருக்கும் இந்த நேர்காணல் தொகுப்பு போர்க்கால வரலாற்றின் மக்கிய ஆவணமாகும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இயங்கு விசையாக உலகத் தமிழர்களை இயங்க வைத்துக் கொண்டிருக்கும் தமிழினப் படுகொலைக்கான நீதி கேட்கும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.