ஏ.சீ.எல். அமீர் அலி. யாழ்ப்பாணம்: மொஹிதீன் பிச்சை மொஹமட் ஜலீல், விதானையார் வீடு, 143, மானிப்பாய் வீதி, 1வது பதிப்பு, 2019. (மஹரகம: மில்லெனியம் கிராப்பிக்ஸ்).
xxi, 344 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-95769-0-2.
பேராசிரியர் அமீர் அலி எழுதிய 19 கட்டுரைகளின் தொகுப்பு. இவை இந்நூலில் நான்கு பகுதிகளாக வகுத்துத் தரப்பட்டுள்ளன. ‘இஸ்லாமும் முஸ்லிம்களும்’ என்ற முதலாவது பிரிவில், இஸ்லாம்போபியா இருந்து மேற்கு போபியா வரை: தீவிரவாத இஸ்லாமியத்தின் நீண்ட பயணம், சிந்தனைத் தேக்கமும் மந்தைப் போக்கும்: உலக முஸ்லீம்கள் உறங்கிய வரலாறு, மேற்கே வளரும் இஸ்லாமியச் சிந்தனை: நாளைய மறுமலர்ச்சியின் இன்றைய விடிவெள்ளி, வரலாற்றுப் பின்னணியில் வஹ்ஹாபியம், பூகோளமயச் சூழலில் வஹ்ஹாபியமும் பாரம்பரிய கலாசாரங்களும், கொந்தளிக்கும் அரபுலகு, தணியாத தாகம் ஆகிய கட்டுரைகளும், ‘இலங்கை முஸ்லிம்கள்’ என்ற பிரிவில் இலங்கை முஸ்லிம்களா? முஸ்லிம் இலங்கையரா?, இலங்கையின் இனவாத அரசியலும் முஸ்லிம்களும், இலங்கை முஸ்லிம்களின் அரசியல் தலைமைத்துவம், விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின் முஸ்லிம்களின் வியாபார அரசியல் ஆகிய கட்டுரைகளும், ‘தமிழர் போராட்டமும் முஸ்லிம்களும்’ என்ற பிரிவில் தமிழீழமும் தமிழ்நாடும்: கசப்பான ஓருண்மை, பூகோளமயவாக்கத்தில் பிரிவினைப் போராட்டங்கள் விலைப்படாத சரக்கு, தமிழ்த் தலைமைத்துவத்தின் தவறுகளும் தமிழரின் இழப்புகளும், இந்திய-இலங்கை உறவில் தமிழர்-முஸ்லிம் சிக்கல்கள், தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம்: எழுத்தாளர்களின் பங்களிப்பும் பணிகளும், ஆகிய கட்டுரைகளும், ‘பொருளியல் சிந்தனைகள்’ என்ற இறுதிப் பிரிவில் நவதாராண்மைப் பொருளாதாரங்களும் பொருளியல் சிந்தனையும், தடையற்ற சந்தைப் பொருளாதாரங்களும் பொருளியலும், பழமொழி கூறும் பொருளியல் உண்மைகள் ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.