ஜேம்ஸ் ரி.இரத்தினம் (ஆங்கில மூலம்), விண்மணி (தமிழாக்கம்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
40 பக்கம், விலை: ரூபா 175., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-575-8.
இலங்கை அரசியலில் 1956ஆம் ஆண்டில் சிங்களம் மட்டும் சட்டம் பண்டாரநாயக்கா அரசினால் கொண்டுவரப்பட்ட வேளையில் 1957 ஜுலை 19 ட்ரிபியூன் (Tribune) இதழில் ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் (1905-1989) அவர்கள் House of Nilaperumal என்றொரு சுவையான ஆய்வுக் கட்டுரையை எழுதியிருந்தார். அதில் பண்டாரநாயக்காவின் மூதாதையர் நீலப்பெருமாள் என்ற தமிழரே என்று நிறுவியிருந்தார். இக்கட்டுரை பிரசுரமான வேளையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்கள் பாராளுமன்றத்தில் பண்டாரநாயக்கவை சீண்டி அவமானப்படுத்தும் நோக்குடன் இக்கட்டுரையை எடுத்தாண்டு உரையாற்றியிருந்தார். ஜே.ஆரின் இந்த நிலைப்பாடு, அவரது நண்பராயிருந்த போதிலும் ஜேம்ஸ் இரத்தினம் அவர்களுக்கு உவப்பாயிருக்கவில்லை. பண்டாரநாயக்கவை கேலி செய்யும் அளவுக்கு ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் மூதாதையர் ஒன்றும் தூய சிங்கள வழித்தோன்றல்கள் அல்ல என்று கூறும் மற்றொரு ஆய்வுக் கட்டுரையை Thambi Mudaliyar’s Legacy என்ற பெயரில் எழுதி 1957 ஓகஸ்ட் 30 ட்ரிபியூனில் பிரசுரித்து ஜே.ஆரின் கொட்டத்தை அடக்கியிருந்தார். பண்டாரநாயக்க, ஜயவர்த்தன பரம்பரையினரின் மூதாதையர் தமிழரே என்ற உண்மையை போட்டுடைத்த ஜேம்ஸ் இரத்தினம் அவர்களின் இவ்விரு கட்டுரைகளின் தமிழாக்கமே இந்நூலாகும்.
மேலும் பார்க்க:
இலங்கையில் வேடர்: வாழ்வியலும் மாற்றங்களும். 15164
கிழக்கின் பழங்குடிகள். 15165