15988 நெடுங்கீற்று.

மலர்க் குழு. நெடுந்தீவு: பிரதேச கலாசாரப் பேரவையும் பிரதேச செயலகமும், 1வது பதிப்பு, ஜுன் 2013. (யாழ்ப்பாணம்: மெகா டிஜிட்டல், 101 கண்டி வீதி, கச்சேரியடி).

xviii, 72 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17 சமீ.

நெடுந்தீவு, பிரதேச கலாசாரப் பேரவையும் பிரதேச செயலகமும் இணைந்து வெளியிட்டுள்ள பிரதேசச் சிறப்புமலர் இதுவாகும். எழில்மிகு எம் தீவு, நெடுந்தீவின் அறிமுகம், Delft Scenic Island, வாழி என் தாய்நாடு, எம் தீவு, நெடுந்தீவின் கலாச்சாரம், நெடுந்தீவும் வாழ்வியலும், நெடுநகர், நெடுந்தீவே நீ வாழ்க, நெடுந்தீவில் நாட்டுக்கூத்து-ஒரு மீள்பார்வை, நெடுந்தீவு கலாசார பேரவையினாலும் பிரதேச செயலகத்தினாலும் கௌரவிக்கப்படும் நெடுந்தீவின் மூத்த கலைஞர்கள், என்றும் மறவாத எம் தாயகமாம் நெடுந்தீவு, மதங்களின் வருகையும் வழிபாட்டுத் தலங்களின் வரலாற்றுப் பெருமையும், தனிநாயக முதலியின் குடியேற்றமும் ஆளுகையும், எம் தீவின் மகிமை, தமிழ்த் தூது தனிநாயகம் அடிகள், ஹைக்கூ கவிதைகள், நெடுந்தீவு-யாழ்ப்பாணத் தமிழர்களின் கலாசார விழுமியங்களின் குறிகாட்டி, சடங்குகளும் நெடுந்தீவின் தனித்துவமும், தொழில் முயற்சிகளின் தளமாக மாறும் வடமாகாணத்தில் மாற்றமடைய வேண்டிய நிலையில் நெடுந்தீவு, நெடுந்தீவு கலாசார பேரவையினாலும் பிரதேச செயலகத்தினாலும் கௌரவிக்கப்படும் நெடுந்தீவின் இளங்கலைஞர்கள், நலிவடையும் நமது கலாசாரம், கலாசார சீர்கேடு, இன்றைய மாணவரும் வாசிப்புப் பழக்கமும், எம் பசுத்தீவு ஆகிய ஆக்கங்களை இம்மலர் கொண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

15723 நிறச் சட்டையும் நிர்மலா ஆசிரியரும் (சிறுகதைகள்).

மயூரதன் (இயற்பெயர்: கந்தையா மயில்வாகனம்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், இணை வெளியீடு, யாழ்ப்பாணம்: கந்தையா கனகம்மா நிதிய வெளியீடு, 1வது பதிப்பு, ஒக்டோபர்