14531 கல்: சிறுவர் சிறுகதைகள்.

பா.இரமணாகரன் (புனைபெயர்: மாவையூர்க் கவி). அச்சுவேலி: பா.இரமணாகரன், சந்நிதி வீதி, இடைக்காடு, 1வது பதிப்பு, 2017. (யாழ்ப்பாணம்: அன்ரா பிறிண்டேர்ஸ், இல. 356A, கஸ்தூரியார் வீதி). xii, 68 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 500., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978- 955-43539-3-0. காலில் தடுக்குப் பட்டு காலைப் பதம்பார்த்த ஒரு கல்லைக் குறிபார்த்து எறிந்து வயிற்றுப் பசியை மட்டுமல்லாது, நிகழவிருந்ததொரு களவையும் தடுத்து, பெண்ணின் தாலியையும் காத்த கந்தனின் திருவருளும், சும்மா கிடந்த கல்லை பிள்ளையாராக வடிவமைத்த சிற்பி அதனை எல்லோரும் வழிபடும் நிலையை அக்கல்லுக்கு ஏற்படுத்தியமையும், மறைந்திருக்கும் இறைவனை மனிதனால் மட்டுமே வெளிக்கொண்டுவர முடியும் என்றும் அதற்கும் அதற்குரிய படிமானமுள்ளவர்களால் மட்டுமே முடியும் என்ற செய்தியையும் உணர்த்தும் கதைகள் இவை. இக்கதைகள், கல், நான் பிரயோசனமானவன், கடவுள் ஏன் கல்லானார், விளையாட்டுப்போட்டி ஆகிய நான்கு தலைப்புகளில் இடம் பெற்றுள்ளன. பிள்ளைகளிடையே நற்போதனைகளை ஊட்டுவதுடன் ஆன்மீகச் சிந்தனையைப் பெருக்கும் வகையிலும் அமைந்துள்ளன.

ஏனைய பதிவுகள்

14747 உறவும் பிரிவும்.

மு.ளு.ஆனந்தன். யாழ்ப்பாணம்: இணுவில் தமிழ்மன்ற வெளியீடு, இணுவில், 1வது பதிப்பு, நவம்பர் 1964. (சுன்னாகம்: நாமகள் அச்சகம்). (2), 61 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 20×13.5 சமீ. காதலை முதன்மைப்படுத்தும் இக்குறுநாவலில்

12516 – பிள்ளைகளுக்குச் சமாதானத்தைக் கற்பித்தல்:

ஓர் மாதிரிப் பாடத்திட்டம் (உயர் இடைநிலை வகுப ;புகளுக ;காக). ஏ.எஸ்.பாலசூரிய (ஆங்கில மூலம்), ஆர்தர் ஜோன்ஸ் பெர்னாண்டோ (தமிழாக்கம்), தை.தனராஜ் (பதிப்பாசிரியர்). மகரகம: கல்வி முகாமைத்துவ அபிவிருத்தித்துறை, தேசியகல்வி நிறுவகம், 1வது பதிப்பு,