தங்கேஸ்வரி கதிராமன். மட்டக்களப்பு: அன்பு வெளியீடு, தவபதி, ஆரையம்பதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1992. (மட்டக்களப்பு: புனித வளனார் கத்தோலிக்க அச்சகம்).
iv, 26 பக்கம், விலை: ரூபா 20.00, அளவு: 22×14 சமீ.
முன்னுரை, அடிகளாரின் ஆய்வு நோக்கு, தொல்லியல் பின்னணி, பாபிலோனிய நாகரீகம், அசுரேனிய நாகரிகம், எபிரேய நாகரிகம், எகிப்திய நாகரிகம், யவனபுர நாகரிகம், தமிழர் நாகரீகம், பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையைக் காட்டும் பிற ஆதாரங்கள், புராணக் கதைகள் கூறும் உண்மைகள், தமிழ் நாட்டவர் இடப்பெயர்வு, வரலாற்றுக்கால ஆய்வு, தொகுப்புரை ஆகிய 15 இயல்களில் இவ்வாய்வு எழுதப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கன்னங்குடாவைப் பிறப்பிடமாகக் கொண்ட செல்வி தங்கேஸ்வரி கதிராமன் களனி பல்கலைக்கழகத்தின் தொல்லியல் சிறப்புப் பட்டதாரியாவார். மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தராகப் பணியாற்றியவர். அவ்வேளையில் இந்நூல் வெளிவந்திருந்தது. (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1372).