எஸ்.அன்ரனி நோர்பேட். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு 2020. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).
vi, 222 பக்கம், அட்டவணை, விலை: ரூபா 1200., அளவு: 24.5×17.5 சமீ., ISBN: 978-955-685-163-2.
சமூக விஞ்ஞான ஆய்வுகளுக்கான புள்ளிவிபர மென்பொருளானது தரவுப் பகுப்பாய்வு மேற்கொள்வதற்கான இலகுவான செய்முறைகளை உள்ளடக்கிய, அனேக ஆய்வாளர்களால் அதிகம் விரும்பப்படுகின்ற ஒரு மென்பொருளாகும். தமிழில் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள், தமது ஆய்வகளுக்கான தரவுப் பகுப்பாய்வினை மேற்கொள்வதற்கான சிறந்த மென்பொருளாக இது இருப்பினும், இதனை உபயோகித்து தரவுப் பகுப்பாய்வு செய்தலுக்கான வழிகாட்டலானது தமிழ்மொழி மூலமான நூல்வடிவில் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் கலாநிதி சிவாணி சண்முகதாஸ் இந்நூலை வெளியிட்டுள்ளார். 17 அத்தியாயங்களைக் கொண்ட இந்நூல் தரவுப் பகுப்பாய்வு மேற்கொள்வது தொடர்பில் இலகுவான வழிகாட்டலை வழங்குகின்றது. அடிப்படையான விளக்கங்களுடன் பல்வேறு தரவுப் பகுப்பாய்வு முறைகளை இலகுவான முறையில் உதாரணங்களுடன் விளக்குகின்றது. நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடத்தின், சந்தைப்படுத்தல் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71451).