மைதிலி விசாகரூபன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பேராசிரியர் சுப்பிரமணியம் வித்தியானந்தன் அறக்கட்டளை, ‘ஸ்ரீவித்யா’, 3ஆவது ஒழுங்கை, தலங்காவல் பிள்ளையார் கோவில் வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, மே 2024. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
xi, 88 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-624-93270-7-8.
பேராசிரியர் சுப்பிரமணியம் வித்தியானந்தன் அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு (1924-2024) நினைவாக வெளியிடப்பட்ட நூல்களில் ஒன்றாக இந்நூல்விபரப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மைதிலி விசாகரூபன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் பிரதி நூலகராகப் பணியாற்றுபவர். இரண்டு பகுதிகளாக பதிவுகள் பிரித்து ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. முதலாவது பகுதியில் வித்தியானந்தனின் ஆக்கங்கள் என்ற தலைப்பின்கீழ் அவரது ஆய்வேடுகள், நூல்கள் மற்றும் சிறுநூல்கள், கட்டுரைகள், வெளியிடப்பட்ட ஆண்டு அறியப்படாத கட்டுரைகள், உரைகள், மேடைத் தயாரிப்புகள் ஆகிய உப-பிரிவுகளின் கீழ் தகவல்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இரண்டாம் பகுதியில் வித்தியானந்தன் பற்றிய ஆக்கங்கள் தொடர்பான பதிவுகள் இடம்பெற்றுள்ளன. இப்பகுதியில் ஆய்வேடு, நூல்கள் மற்றும் சிறு நூல்கள், கட்டுரைகள் ஆகிய மூன்று உபபிரிவுகளின் கீழ் தகவல்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. நூலின் இறுதியில் தலைப்புச் சுட்டி ஒன்றும் இடம்பெற்றுள்ளது.