17015 பொது நூலகங்கள் சமூக மாற்றத்திற்கான செயலூக்கிகள்.

 ச.சண்முகதாசன். யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2024. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

(2), 36 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் நூலகர் ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம் சிவநேசன் அவர்கள் அமரத்துவமடைந்த ஐந்தாவது ஆண்டு நினைவு வைபவம் 18.12.2024 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வேளையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நினைவுப் பேருரையின் எழுத்து வடிவம் இது.  நினைவுப் பேருரையாற்றிய கலாநிதி ச.சண்முகதாசன் வவுனியா பல்கலைக்கழகத்தின் பதில் நூலகராகப் பணியாற்றுபவர்.

ஏனைய பதிவுகள்