17032 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: 16ஆவது ஆண்டு அறிக்கை (1957-1958).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 21, 33ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1958. (கொழும்பு 11: ஸ்டான்கார்ட் பிரின்டர்ஸ் லிமிட்டெட், 196, செட்டியார் தெரு).

10 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

1942ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் தமிழர் முன்னேற்றக் கழகம், 1945இல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் எனப் பெயர் பெற்றது. இச்சங்கத்தின் 1957-1958 ஆண்டுக் காலகட்டத்துக்குரிய 16ஆம் ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 12.8.1958 அன்று வெள்ளவத்தை சைவ மங்கையர் கழக மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் 16ஆவது ஆண்டுப் பொதுக்; கூட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு ஆட்சிக் குழுவினர் சமர்ப்பித்த அறிக்கை. இதில் 1957ஆம் ஆண்டு ஜுன்; 29ஆம் திகதி முதல் 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் திகதி வரை கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆற்றிய பணிகளை பதிவுசெய்துள்ளனர். இவ்வாண்டுக் காலகட்டத்தில் மேற்படி சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்கள் 88 பேரும் சாதாரண உறுப்பினர் 323 பேருமாக மொத்தம் 411 பேர் இணைந்திருந்தனர். இக் காலகட்டத்தில் பொதுச் செயலாளராக திரு. க.வயிரமுத்து சேவையாற்றியிருந்தார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 5082).

ஏனைய பதிவுகள்

Danske Casino I kraft af Afgift 2024

Content Spiludvalg Knightslots Casino: Tilføjet Marts 2023 Kasino Dannevan Casinoer Det er værd at opleve inklusive inden for dine overvejelser, da det inden for sidste