17042 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: 34ஆம் ஆண்டு ஆட்சிக்குழு அறிக்கை (1975-1976).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, உருத்திரா வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1976. (அச்சக விபரம் தரப்படவில்லை).

24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.

1942ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் தமிழர் முன்னேற்றக் கழகம், 1945இல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் எனப் பெயர் பெற்றது. இச்சங்கத்தின் 1975-1976ஆம் ஆண்டுக் காலகட்டத்துக்குரிய 34ஆம் ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதில் 1975ஆம் ஆண்டு மார்கழி 6ஆம் திகதி முதல் 1976ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் திகதி வரை கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆற்றிய பணிகளை பதிவுசெய்துள்ளனர். இவ்வாண்டுக் காலகட்டத்தில் மேற்படி சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்கள் 130 பேரும் சாதாரண உறுப்பினர் 197 பேருமாக மொத்தம் 327 பேர் இணைந்திருந்தனர். இக் காலகட்டத்தில் தலைவராக மு.வயிரவப்பிள்ளையும் பொதுச் செயலாளராக திரு. க.கந்தசுவாமியும் சேவையாற்றியிருந்தனர்.

ஏனைய பதிவுகள்

Lucky Pharaoh Deluxe Erfolg Play Nachprüfung

Content Betway Casino Kein Einzahlungscode – Über Lucky Pharaoh Tricks Höhere Gewinne Einbringen? Grausam Pharao Spielbank Discussion What Are The Best Angeschlossen Casinos For United

15041 விசேட செய்தி அறிக்கையிடல்.

ரூபன் மரியாம்பிள்ளை. யாழ்ப்பாணம்: பிஷப் சவுந்தரம் மீடியா சென்டர், இல. 891, ஆஸ்பத்திரி வீதி, 1வது பதிப்பு, ஜீன் 2020. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை). xviii, 176, (16) பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள்,