17049 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: 41ஆம் ஆண்டுப் பொது அறிக்கை (1983).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1983. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி).

13 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் 1982-1983 ஆண்டுக் காலகட்டத்துக்குரிய 41ஆம் ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு ஆட்சிக் குழுவினர் சமர்ப்பித்த அறிக்கை. இதில் 1983ஆம் ஆண்டு கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆற்றிய பணிகளை பதிவுசெய்துள்ளனர். இதுநாள் வரை மொத்தம் 197 ஆயுள்கால உறுப்பினர்களும் 51  சாதாரண உறுப்பினர்களும் 16 கௌரவ உறுப்பினர்களும் இணைந்திருந்தனர். இவ்வாண்டிலேயே தமிழக முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களால் மூன்று தொகுதிகளாக அனுப்பிவைக்கப்பட்ட நூல்களில் முதலாம் தொகுதிக்குரிய 504 நூல்கள் மே மாதத்தில் சங்க நூலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இனவன்முறை காரணமாக ஜ{லை மாதம் இலங்கையை வந்தடைந்த இரண்டாம் தொகுதி பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு கொழும்பிலுள்ள இந்திய தூதராலயத்தில் இப்பொதி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

ஏனைய பதிவுகள்

Reel look these up Fishing Games

Articles Penn Spinfisher Vi Ssvi10500 Cow Elk Phone call A quick Intro In order to Real cash Position Provides Slot Information Some other cool issue