17054 கொழும்புத் தமிழ்ச்சங்கம்: 56ஆவது ஆண்டுப் பொது அறிக்கை (1997-1998).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: சங்கப் பணிமனை, கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1998. (கொழும்பு 6:  நியூ கார்த்திகேயன் பிரின்டர்ஸ், 501/2, காலி வீதி, வெள்ளவத்தை).

36 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

1942ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் தமிழர் முன்னேற்றக் கழகம், 1945இல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் எனப் பெயர் பெற்றது. இச்சங்கத்தின் 1997-1998 ஆண்டுக் காலகட்டத்துக்குரிய 56ஆம் ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதில் 1997ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி முதல் 1998 ஆம் ஆண்டு ஜுன் 28ம் திகதி வரை கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆற்றிய பணிகளை பதிவுசெய்துள்ளனர். இவ்வாண்டுக் காலகட்டத்தில் மேற்படி சங்கத்தின் ஆயுள் உறுப்பினர்கள் 263 பேரும் சாதாரண உறுப்பினர் 118 பேருமாக மொத்தம் 381 பேர் இணைந்திருந்தனர். இக்காலகட்டத்தில் பொதுச் செயலாளராக திரு. சோ.தேவராஜா சேவையாற்றியிருந்தார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 5105).

ஏனைய பதிவுகள்

Fortune Rabbit Sinal On Grupo Premium

Содержимое Baixe E Jogue Fortune Rabbit Brazil – Jogo No PC – LD SPACE 🔴Melhor Horário Para Jogar Fortune Rabbit à Noite E Dia🔴 Minutos