17063 கொழும்புத் தமிழ்ச்சங்கம்: 68ஆவது ஆண்டு அறிக்கை (2009-2010).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: சங்கப் பணிமனை, கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை).

42 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

1942ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் தமிழர் முன்னேற்றக் கழகம், 1945இல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் எனப் பெயர் பெற்றது. இச்சங்கத்தின் 2009-2010 ஆண்டுக் காலகட்டத்துக்குரிய 68ஆம் ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கை 15.08.2010 அன்று சங்கத்தின் பொதுக்கூட்டம்  பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற வேளை ஆட்சிக் குழுவினரால் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் 2009ஆம் ஆண்டு ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் 2010 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி வரை கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆற்றிய பணிகளை பதிவுசெய்துள்ளனர். இவ்வாண்டுக் காலகட்டத்தில் மேற்படி சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்கள் 573 பேரும் சாதாரண உறுப்பினர் 179 பேருமாக மொத்தம் 752 பேர் இணைந்திருந்தனர். இக்காலகட்டத்தில் பொதுச் செயலாளராக திரு. ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி சேவையாற்றியிருந்தார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 7286).

ஏனைய பதிவுகள்