17079 ஒரு நூலியலாளரின் தேடல்கள்.

என்.செல்வராஜா. யாழ்ப்பாணம்: எங்கட புத்தகங்கள், 906/23, பருத்தித்துறை வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

154 பக்கம், விலை: ரூபா 680., அளவு: 22×15 சமீ., ISBN: 978-624-6567-03-3.

ஈழத்தின் இலக்கிய அமைப்புகள், வெளியீட்டகங்கள், பத்திரிகை நிறுவனங்கள் மற்றும் சஞ்சிகை வரலாறுகள் பற்றிய நூலியலாளர் என்.செல்வராஜா அவர்களின் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும். ‘இலக்கிய அமைப்புகள் மற்றும் வெளியீட்டகங்கள்’ என்ற முதலாவது பிரிவில், வீரகேசரி வெளியீடுகள், எங்கட புத்தகங்கள், கல்ஹின்னை தமிழ் மன்றம், துரைவி பதிப்பகம், சிந்தனை வட்டம், வெற்றிமணி ஆகிய 6 நிறுவனங்களின் வரலாறுகளும், ‘பத்திரிகை’ என்ற இரண்டாவது பிரிவில் ஈழநாடு, ஈழநாதம், சுதந்திரன் ஆகிய பத்திரிகைகளின் வரலாறு தொடர்பான 4 கட்டுரைகளும், ‘சஞ்சிகைகள்’ என்ற மூன்றாவது பிரிவில், சமர், ஈழத்துச் சஞ்சிகைகளின் பெருந்தொகுப்புகள், நூலகவியல் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 3 கட்டுரைகளுமாக மொத்தம் 13 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. நூலியலாளர் என்.செல்வராஜாவின் 74ஆவது நூலாகவும் ‘எங்கட புத்தகங்கள்’ வெளியீட்டகத்தின் 14ஆவது நூலாகவும் வெளியிடப்பட்டுள்ள இந்நூல் நூலியலாளரின் எழுபதாவது அகவை நிறைவையொட்டி 2024 ஐப்பசியில் வெளியிடப்பட்ட நான்கு சேவை நயப்பு வெளியீடுகளில் ஒன்றாகும்.

ஏனைய பதிவுகள்

14802 மூவுலகு (நாவல்).

தெணியான். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2018. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). 216 பக்கம், விலை: ரூபா 650., அளவு:

Cellular Casinos

Blogs The major On the internet Roulette Gambling enterprises In the us Bring your Online casino games With you On the go Current Greatest About