17085 உரோமப் பேரரசன் மார்க்கஸ் அரேலியசின் சுயதியானங்கள்.

மார்க்கஸ் அரேலியஸ் (மூலம்),  மாரிமுத்து பிரகாஷன் (தமிழாக்கம்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2024. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

xii, 220 பக்கம், விலை: ரூபா 1650., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6164-71-3.

உரோமப் பேரரசின் மெய்யியல் பாரம்பரியத்தில் உருவான நூலே உரோம சாம்ராச்சியத்தின் பேரரசராக இருந்த மார்க்கஸ் அரேலியசின் (கி.பி. 26 ஏப்ரல் 121 – 17 மார்ச் 180) நல்வாழ்க்கைக்கான  சுயகுறிப்புகளாக உள்ள Meditations என்பதாகும். பிளேட்டோவின் தத்துவ ஆட்சியாளருக்கான (Philosopher King) ஒரேயொரு உதாரணமாக வரலாற்றில் இவர் பதிவாகியுள்ளார். சிறந்த ஐந்து பேரரசர்களில் ஒருவராக வரலாற்றாசிரியர்களினால் புகழப்படுபவர் மார்க்கஸ் அரேலியஸ். பிளேட்டோவின் சிந்தனைக்கு ஏற்ப இவரது ஆட்சி அமைந்திருந்தது என்பர் ஆய்வாளர்கள். மார்க்கஸ் அரேலியஸ் தன்னுடைய சொந்த வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்காக கற்றுக்கொண்ட தத்துவ உண்மைகளை மீள்ஞாபகப்படுத்துகின்றதொரு முறையாகவும், வாழ்க்கை அனுபவங்களை தத்துவ உண்மைகளின் அடிப்படையில் அணுகுகின்றபோது தன்னுடைய செயற்பாடுகள் தான் கற்றுக்கொண்ட உண்மைகளின் அடிப்படையில் உள்ளன என்பதனை உறுதிப்படுத்திக்கொள்வதற்கானதொரு முறையாகவும் எழுதிவைத்திருந்த குறிப்புகளே தற்போது ‘சுய தியானங்கள்’ என்ற பெயரில் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலை ஆங்கிலவழி தமிழுக்கு மொழிபெயர்த்துள்ள மாரிமுத்து பிரகாஷன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் மெய்யியல் விழுமியக் கற்கைகள் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராவார்.

ஏனைய பதிவுகள்

Fx No deposit Incentives

Articles Ignition Casino No-deposit Incentive Code Who’s Entitled to A no-deposit Local casino Added bonus? No-deposit From 888casino Can i Withdraw A no-deposit Extra? Finest