17096 உனது வெற்றி உனது மனதில்.

சபா இராஜேந்திரன். கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம், 202, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 2024. (கொழும்பு 13: தேவி அச்சகம், 529/9, கே.சிறில் சி.பெரேரா மாவத்தை).

vi, 143 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21×15 சமீ.

அறிமுகம், வெற்றி, மனம், நம்பிக்கைகள், விழுமியங்கள், ஆக்ககரமான பாவனைத்திறன், மனோநிலைகள், சுயபிம்பம், தொடர்புமுறை, உடம்பிலே உருவாகும் சக்தி, ஞாபகசக்தியை வளர்த்தல், வலுவான செயற்பாடுகள் ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறையில் 1943ஆம் ஆண்டு பிறந்த இவர் 1967அம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில்; BSc (Engineering) பட்டம் பெற்றபின் 1972ஆம் ஆண்டு இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்கலாநிதிப்பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். இலங்கை, இந்தியா, கனடா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்த இவர் 2002ஆம் ஆண்டு முடிவில் ஓய்வுபெற்று வல்வெட்டித் துறையில் வாழ்ந்த வருகிறார். ‘சிதறிய சித்தார்த்தன்’, ‘கலவை’, நானும் ஒரு கடவுள்தான்’ ஆகிய நூல்களை எழுதிய பாமினி செல்லத்துரை இவரது மகளாவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 72547).

ஏனைய பதிவுகள்

12819 – உள்ளமென்னும் மாளிகையில்.

குகனேந்திரன். யாழ்ப்பாணம்: நிலா மலர் வெளியீடு, காங்கேசன்துறை சாலை, கொக்குவில், 1வது பதிப்பு, வைகாசி 2002. (யாழ்ப்பாணம்: ஷாமளி அச்சகம்). (4), 203 பக்கம், விலை: ரூபா 95.00, அளவு: 16.5 x 12.5