17098 நவீன யுகத்தை வெற்றி கொள்வதற்கான 21 விதிகள்.

பத்மசேனன் சனோசன். யாழ்ப்பாணம்: கலைப்பீட மாணவர் ஒன்றியம், யாழ்பபாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜுலை 2023. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

xxxii, 215 பக்கம், விலை: ரூபா 1300., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-624-99407-5-8.

கிளிநொச்சி குமுழமுனையில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்று உள்நாட்டுப் போரின் மூலம் ஏற்பட்ட இடப்பெயர்விற்குப் பின்பு முழங்காவில் தேசிய படசாலையில் தரம் 10, சாதாரணதரம், உயர்தரம் கற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்விகற்று கலைமாணிப் பட்டம் பெற்றதோடு, உளவியல் துறை டிப்ளோமா கற்கையின் இறுதிவருட மாணவனாகக் கல்வி பயிலும் சனோசன் எழுதியுள்ள மானிட மேம்பாட்டு நூல். இயற்கைக்கான விதிகள் (நன்றி, அன்பு, பிரபஞ்சம், ஆழ்மனம்), மனிதர்களுக்கான விதிகள் (இலட்சியம், சிறந்த நண்பர்கள், கருத்துக்கள், வழிகாட்டல்கள், திட்டமிடல்), மனதிற்கான விதிகள் (அவமானம், மகிழ்ச்சி, நிறைவுகாணல், தோல்வியும் விடாமுயற்சியும்), நடத்தைக்கான விதிகள் (ஆரோக்கியம், நேரமுகாமைத்துவம், உடன் செயற்படல், வாசிப்பு முக்கியமானது), அனுபவத்திற்கான விதிகள் (சவால்களை எதிர்கொள்ளல், கல்வி, சுயமுயற்சி, ஒழுக்கம்), வெற்றிக்கான விதி (மாற்றம்) ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Earn Earn Slot machine

Blogs Nz pokies | Ainsworth Video slot Reviews No Free Game What is the Amount of Signs One Trigger The new Dual Winnings Incentive? Greatest