17104 திருக்குறள் எளிமையான உரையும் விளக்கமும்.

மனோன்மணி சண்முகதாஸ். யாழ்ப்பாணம்: கோகுலம் வெளியீடு, 1வது பதிப்பு, 2024. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

lxxviii, 1385 பக்கம், விலை: ரூபா 5000., அளவு: 23×16 சமீ., ISBN: 978-624-93757-5-8.

இந்நூலில் திருக்குறளுக்கு மிக எளிமையான உரைநடையிலே உரைகள் ஆக்கப்பட்டுள்ளன. காலத்திற்கு ஏற்ற வகையில் உரைவிளக்கம், செய்யுட்பிரிப்பு, சொற்பொருளுரை, பொழிப்புரை, குறிப்புரை ஆகிய நான்கு கட்டமைப்புகளில் தரப்பட்டுள்ளன. செய்யுட் பிரிப்பு என்பது புணர்த்தி எழுதப்பட்டுள்ள மூலக் குறள் வடிவத்தைப் பிரித்து எளிதில் படிக்கும் வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பரிமேலழகரின் மூலவடிவமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பாரிய நூல் பணிந்துரை, முன்னுரை, திருக்குறள் உள்ளடக்கம், உள்ளடக்க விரிவுநிலை, திருக்குறள் அகரவரிசை,  திருக்குறள் அறிமுகம், திருக்குறளில் பயன்படுத்தப்பட்ட உவமைகள், திருக்குறளில் சொற்பயன்பாடு, திருக்குறள் சிறப்புப் பாயிரமாகிய திருவள்ளுவமாலை, உரைவிளக்கம்- அறத்துப்பால், உரைவிளக்கம்- பொருட்பால், உரைவிளக்கம்- காமததுப்பால் ஆகிய  பதினான்கு பிரிவுகளின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இறுதியில் திருக்குறள் அதிகாரத் தலைப்பு விளக்கம், திருக்குறள் அதிகாரங்களின் கட்டமைப்பு (பரிமேலழகர் பகுத்தமை) ஆகிய இரு பின்னிணைப்புகள் காணப்படுகின்றன.

ஏனைய பதிவுகள்

Bejeweled 2 Fandom

Posts Launch Date Bejeweled 2 for Bejeweled Spin Bejeweled dos to have Bejeweled step 3 Along with step 1.17 Common Mods For every scenario will