கலைவாணி இராமநாதன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மே 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
372 பக்கம், விலை: ரூபா 1800., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-32-1.
திருமதி கலைவாணி இராமநாதன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இந்து நாகரிகக் கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டபோது அங்கு இந்து நாகரிகத்தில் முதன்முதல் சிறப்புக் கலையில் பயின்று சிறப்புத் தேர்ச்சி பெற்றவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இத்துறையில் தனது முதுகலைமாணிப் பட்டத்தையும் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றவர். யாழ்;ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்து நாகரிகத்துறைத் தலைவராகவும் சம்ஸ்கிருதத்துறைத் தலைவராகவும் பணியாற்றியவர். இந்நூலில் இவர் எழுதிய வடமொழி நூல்களில் சைவசித்தாந்தக் கருவூலங்கள், அஷ்டப்பிரகரண சைவசித்தாந்த நூல்களும் சத்தியோஜோதி சிவாச்சாரியாரும், பதிக் கோட்பாடு, பசுக் கோட்பாடு, பாசக் கோட்பாடு, முக்திக் கோட்பாடு, அறவொழுக்கச் சிந்தனைகள் ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இறுதியில் மேற்கோள் நூற்பட்டியல் பதிவும் இடம்பெற்றுள்ளது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 357ஆவது நூலாக வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 72262).