ச.முகுந்தன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
viii, 274 பக்கம், விலை: ரூபா 1900., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-6164-26-3.
இந்து நாகரிகம் உலகின் மூத்த நாகரிகங்களில் ஒன்றாகும். தமது பல்கலைக்கழகக் கல்வியின் முதலாம் வருடத்தில் இந்து நாகரிகத்தை கற்கப் புகும் மாணவர்களை மனதில் இருத்தி இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பண்பாடு-நாகரிகம் ஆகிய எண்ணக்கருக்களின் விளக்கமும் இந்து நாகரிகத்தின் சிறப்பியல்புகளும், வேதங்கள், மௌரியர் காலத்தில் இந்துப் பண்பாடு, குஷாணர்கால இந்துப் பண்பாட்டு வளர்ச்சி, குப்தர் கால இந்துப் பண்பாட்டு வளர்ச்சி, புராதன இந்து அரசியல், நிர்வாகம் மற்றும் இந்துச் சட்டத்தின் அடிப்படைகள், மூவகை வேதாந்தம், சைவசித்தாந்தம், சங்ககாலத் தமிழகத்தில் இந்துப் பண்பாடு, களப்பிரர் ஆட்சியில் தமிழகத்தில் இந்துப் பண்பாடு, பல்லவர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் இந்துப் பண்பாட்டு வளர்ச்சி, இலங்கைத் தொல்குடிகளான வேடர்களின் வழிபாட்டுச் சடங்குகளும் நம்பிக்கைகளும், இலங்கையில் கிராமிய வழிபாடு சில அறிமுகக் குறிப்புகள் ஆகிய 13 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கலாநிதி சயனொளிபவன் முகுந்தன் நல்லூர் கந்தர்மடத்தைச் சேர்ந்தவர். யாழ்ப்பாண இந்துக் கல்லூரியின் பழைய மாணவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்து நாகரிகத்தில் சிறப்புக் கலை பயின்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். பண்பாட்டியற் கற்கைகளில் முதுகலைமாணிப் பட்டத்தையும் இந்து நாகரிகத்தில் முதுதத்துவமாணிப் பட்டத்தையும் பெற்றவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்து நாகரிகத்துறைத் தலைவராகக் கடமையாற்றி வருகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71510).