17117 அமைதியில் ஆண்டவரோடு.

சகோ.லலித் பெரேரா (சிங்கள மூலம்), செல்வி வயலற் இம்மனுவேல் (தமிழாக்கம்), மா.றேஜிஸ் இராசநாயகம் (தொகுப்பாசிரியர்). ஜேர்மனி: தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம், ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு).

64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.

செபம் பற்றிய எமது கண்ணோட்டம் என்ன?, ஆண்டவருடன் தனிப்பட்ட சந்திப்பு, இறைவனிடமிருந்து விலகுதல் ஆன்மீக இருள், இறைவனோடு சந்திப்பு, அமைதியான நேரத்தை ஆரம்பிப்பது எப்படி?, இறைவார்த்தை மூலம் இறைவனது குரலைக் கேட்பதற்கு சில உதாரணங்கள், இறைவனோடு அன்புறவு, திருப்பாடல்கள் 23, 81 வழியாக செபித்தல் ஆகிய அத்தியாயங்களில் இக் கிறிஸ்தவ ஆன்மீக நூல் எழுதப்பட்டுள்ளது. இறை சகோதரர் லலித் பெரேரா முன்னதாக இயேசு அன்பின் சமுத்திரம், இதை என் நினைவாகச் செய்யுங்கள், வாழ்வின் வேர்களைத் தேடி, உயிரூற்று, கிறிஸ்துவில் வளர ஆகிய நூல்களை எழுதியுள்ளார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 91267).

ஏனைய பதிவுகள்

13358 இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு.

இலங்கை அரசாங்கம். கொழும்பு: பாராளுமன்ற செயலகம், இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு, 1வது பதிப்பு, டிசம்பர் 1988. (கொழும்பு: அச்சுத் திணைக்களம்). x, 230 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு 24×17 சமீ. இவ்வரசியலமைப்புச்