இலங்கை வேதாகம சங்கம். கொழும்பு 3: இலங்கை வேதாகம சங்கம், 293, காலி வீதி, 1வது பதிப்பு, 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை).
235 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×20.5 சமீ., ISBN: 978-624-5813-04-9.
100 படிகள் குடும்ப வேதாகமமானது சிறப்பாக எட்டு வயது குழந்தைகளக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த 100 படிகள் மூலம் ஒரு குழந்தை தனது குடும்பத்தாருடன் சேர்ந்து வேதாகமத்தை கற்றுக்கொள்ள முடியும். பின்வருபவை ஒவ்வொரு படிகளிலும் அமைந்துள்ளன. 1. ஒன்றாகப் படிக்க வேதாகமத்திலிருந்து ஒரு பகுதி, 2. கவனிக்கவும் கலந்துரையாடவும் ஒரு எடுத்துக்காட்டு, 3. செயற்பாடுகள் அல்லது சிந்தனைக்கு சில விடயங்கள், 4. பிரதிபலிப்பு மற்றும் கலந்துரையாடலுக்கான கேள்விகள், 5. வேதாகமத்தின் பின்னணி பற்றிய உண்மைகள். இவற்றிற்கு மேலதிகமாக ஒவ்வொரு பகுதியிலும் குழந்தையின் தனிப்பட்ட கற்றல் முறை கருத்திற்கொள்ளப்பட்டுள்ளது. இம்முறையில் ஒவ்வொரு குழந்தையும் வேதாகமத்தை தமது சொந்த வழியிலும் அவரவர் வேகத்திலும் கற்றுக்கொள்ளலாம். இந்நூல் நெதர்லாந்து வேதாகம சங்கத்தின் அனுசரணையுடன் இலங்கை வேதாகம சங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71582).