17123 ஆட்கொண்ட போது.

யோகேஸ்வரி சிவப்பிரகாசம். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஐப்பசி 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

52 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-6601-21-8.

ஆக்க இலக்கியத்துறையில் சிறந்ததொரு படைப்பாளியான யோகேஸ்வரி சிவப்பிரகாசம், ஆன்மீகத்துறையிலும் ஈடுபாடு கொண்டவர். இறைவன்பால் மனித மனங்களின் ஆட்கொள்ளல்கள் தொடர்பாக  தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தினரின் ‘ஞானச் சுடர்’ இதழ்களில் ‘ஆட்கொண்டபோது’ என்ற தலைப்பில் தொடராக எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும். இத்தொடர் பற்றி யோகேஸ்வரியின் கூற்று பின்வருமாறு: ‘பரிபக்குவமடையும் ஆன்மாவை இறைவன் ஆட்கொள்கின்றான். இதுவே அதன் உச்ச நிலையாகும். இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட ஒருவர், அந்தக் கணத்தில் அடைந்த அநுபவத்தை விரிவாகக் கூறுகையில் கேட்போர் மனங்களில் இதமான நறுமணத்துடன் மலரும் மலர்களாகி மகிழ்கின்றன. அதனைக் கேட்போருக்கே இத்தகு இன்பமயமான நிலை ஏற்படுமானால் ஆட்கொள்ளப்பட்ட ஆன்மாவின் நிலை எவ்வாறு இருந்திருக்கும்? பதிலைத் தேடினேன். ஆட்கொள்ளப்பட்டோரின் வாய்மொழியாக என் கண்ணில் தென்பட்ட சில கூற்றுகளைத் திரட்டி கட்டுரைகளாக்கினேன்.’ இந்நூல் ஜீவநதி வெளியீட்டகத்தின் 421ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Online game, Laws and much more!

Content 3: Assessment the brand new Shortlisted Web sites Finest online blackjack websites Finest 5 Gambling enterprises to play Black-jack On the internet Nuts Casino